வெளிப்படுத்தின விசேஷம் 4 அதிகாரம் #1 Jeffersonville, Indiana, USA 60-1231 1. ... நானே ..... அது தான் அநேக மக்களுடைய மனப் பான்மையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அங்கே இருக்கிற அந்த இளம் சகோதரி பாடிய பாடலின் கடைசி வரியை நான் நிச்சயமாக மெச்சுகிறேன். நாம் புத்தாண்டின் இரவில் வந்து கொண்டிருக்கையில், இந்த இராத்திரிக்கு பொருத்தமான இதை விட சிறந்ததொரு பாடலை பாட முடியும் என்று நான் நினைக்க வில்லை . புத்தாண்டை நாம் நல்லபடியாக ஆரம்பிக்கிறது போல் தெரிகிறது; ஆண்டின் இந்த சமயத்தில் இண்டியானாவுக்கு உரித்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி, வெளியே பனி பெய்து கொண்டும், பனி நீர் தெளித்துக் கொண்டும் இருக்கிறது, ஜார்ஜியா விலிருந்தும், ஒஹையோவிலிருந்தும் மக்கள் வந்திருக்கிறீர்கள். சகோதரன் டோ, சகோதரி டோ ஆகியோர், ஓஹையோவில் இதே போன்ற சீதோஷ்ண நிலை இருக்கிறது என்பதை அறிவீர்கள். ஆனால் நாம் ஒரு பரம தேசத்திற்குப் போய்க்கொண்டு இருக்கி றோம். அங்கே அந்த விதமானவையெல்லாம் இருக்காது. அங்கே இப்படியிருக்காது என்பதை பாருங்கள். 2இன்று புத்தாண்டுக்கு முந்திய இரவு வேளையாயிருக்கிறது. நிச்சயமாக ஒவ்வொருவரும் புத்தாண்டுக்காக ஒரு பிரதிக்கினையை எழுதி வைக்கிறார்கள். புத்தாண்டுக்காக ஒரு உறுதிமொழியை செய்யப்போகிறீர்கள், பிறகு, நாளைக்கு நாளில், அவையாவும் முறிக்கப்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய பக்கத்தை நீங்கள் திருப்புகிறீர்கள். அதன்பிறகு அடுத்த நாள் காலை யில் பழையபடி திரும்பிவிடுகிறீர்கள். ஆனால் ஒரு காரியத்தை மாத்திரம் நான் கூற விரும்புகிறேன். அது, அப்போஸ்தலனாகிய பவுல், “பின்னானவைகளை மறந்து ,'' கடந்த காலத்தில் உள்ள என் அனைத்து தவறுகளையும், மற்றும் நான் செய்திட்ட அனைத்து காரியங்களையும் தள்ளிவிட்டு, ”கிறிஸ்து இயேசுவுக்குள்..... பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்'' என்று கூறியதைப் போல் கூற விரும்புகிறேன். கடந்த ஆண்டில் உள்ள எனது பிழைகளும், என் ஜீவியத்தின் கடந்த பாகத்தைக் குறித்தும் நான் விசனமடைகிறேன். எனவே, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவதற்காக அவருடைய கிருபையை மாத்திரம் நான் தாழ்மையுடன் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நம் யாவருடைய சாட்சியும் அந்த விதமாகத் தான் இருக்கும் என்றும், அவ்விதமாகத்தான் நாம் யாவரும் உணருகிறோம் என்றும் நான் நம்புகிறேன். 3இன்று இரவில் கால நிலையானது மோசமாக இருப்பதற்காக வருந்துகிறேன். அதனால் ஜனங்கள் வர முடியாமற்போயிற்று, நான் சகோதரன் நெவில் அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர் இங்க வரமுடியுமா இல்லையா என்பதை நான் அறியவில்லை. பிறகு, சகோதரன் இல்லையா என்பதை நான் அறிய வில்லை. பிறகு சகோதரன் ஸ்கேக்ஸ் அவர்கள் வந்தார். அவர் மிகத் தொலைவிலுள்ள கென்டக்கியிலிருந்து வருகிறார். அங்கே பனிக் கட்டி மூன்று அடி உயரத்திற்கு அல்லது இன்னும் சற்று அதிகமாக பெய்ந்திருக்கிறது. ஏறத்தாழ இங்குள்ளதைப் போலவே இருக்கிறது'' என்று அவர் கூறினார். இரு தடவைகள் அவர் சென்று கொண்டிருந்த வாகனத்தை, ஒரு விவசாயி பனியைவிட்டு வெளியே தனது ட்ராக்டரைக் கொண்டு இழுத்துக்கொண்டு வந்து, மலையின் மேல் கொண்டு வந்துவிட்டிருக்கிறார். எனவே, ''நல்லது, பனிக்கட்டி இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள் உயரம் இருக்குமானால், அதைப்போல் இருக்குமளவும், நாங்கள் அதைப் பொருட்படுத்தமாட்டோம்'' என்று எண்ணினேன். ஆனால் சாலைகள் வாகனங்கள் கடந்து செல்லத்தக்கதாகத்தான் உள்ளன, யாவரும் பிரயாணம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். 4இப்பொழுது நிச்சயமாக, இன்றிரவானது, வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கிற பல்வேறு ஊழியக்காரர்கள் மூலமாக நாம் பிரசங்கம் கேட்க கூடியதான இரவாக இருக்கிறது. இன்றிரவில் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் ஒருவேளை நடுநிசி வரையிலும் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அமர்ந்திருந்து, பழைய ஆண்டு கடந்து போகவும், புத்தாண்டு வருவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். வழக்கமாக அவர்கள் பீடத்தண்டையில் கூடி வந்து, தேவனுக்கென்று தங்களுடைய புதிய பிரதிக்கினைகளை செய்து, ஏற்கனவே செய்த பிரதிக்கினைகளை புதுப்பித்துக்கொள்ளவும் செய்வார்கள். நான் சகோதரன் நெவில் அவர்களிடம் கூறினேன்.... அவர் வருகிறாரா என்பதைப்பற்றி அறிவதற்காக நான் அவரை தொலை பேசியின் மூலம் அழைத்துப் பேசினேன். 'அவர் வராவிடில், என்னால் முடிந்தவரை சிறப்பான அளவுக்கு தொடர்ந்து ஆரா தனையை நடத்திச் செல்வேன். பின்பு காலையிலும் அவரால் வர இயலாமற்போனால், அவர் இல்லாத அவ்வேளையில் நான் முடிந்த வரை நல்ல முறையில் தொடர்ந்து நடத்திச் செல்வேன்'' என்று கூறினேன். இன்றிரவில் பதினைந்து நிமிட நேரத்திற்கு மட்டுமே உள்ள ஒரு செய்தியை அளிக்க நான் முயற்சி செய்யப்போகிறதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் என்று நான் அவரிடம் கூறினேன். இங்கே உட்கார்ந்து காத்துக்கொண்டிருக்கிற இன்னும் பல்வேறு ஊழியக்காரர்கள் இருப்பதை நான் காண்கிறேன். 5எனவே, நான் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் இருந்து தொடர்ந்து பிரசங்கிக்கும்படி 4ம் அதிகாரத்தை இப்பொழுது எடுத்துக்கொண்டு ஆரம்பிப்பேன் என்று எண்ணினேன். அதன்பிறகு நாம் 5ம் அதிகாரத்திற்கும், பின்பு 6ம் அதிகாரத்திற்கும், பின்பு இன்னும் முடிந்த வரையிலும் போவோம். அவைகளைப் பார்க்க கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. நாம் ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு காரியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சற்று நேரத்திற்கு முன்பாக சகோதரன் ட்ரம் மாண்ட் தாம்ஸ் அவர்களும், அவரது மனைவியும் வருகை புரிந் திருக்கின்றனர். இங்கே இன்றிரவில் அச்சகோதரியின் தாயும் தந்தையும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுதுதான் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். அங்கே அவர்கள் மகத்தான ஆத்தும ஆதாயக் கூட்டங்களையும், தெய்வீக சுகமளித்தல் ஆராதனைகளையும் நடத்தி விட்டு வந்திருக்கிறார்கள். இந்த இளம் பெண்மணி தன்னுடைய பாட்டியின் ஸ்தானத்தை அன்றொரு நாளில் எடுத்துக்கொண்டு சிறைகளில் கூட்டங்கள் நடத்தி வந்தாள். பாவிகள் கர்த்தரிடம் வந்தார்கள். அந்த இளம் தம்பதியினரை தேவன் எவ்வாறு நடத்தி வருகிறார் என்பதை அறிய அற்புதமாய் இருக்கிறது. அவர்கள் இருவரும் இப்பொழுது அமெரிக்காவில், சிறிது காலம் சுவிசேஷ ஊழியத்தினிமித்தம் இருக்கிறார்கள். மேய்ப்பர்கள் யாராவது விரும்பினால்... நான் சகோதரன் ட்ரம்மாண்டுக்கு எழுத விரும்புகிறேன். ட்ரம்மாண்ட்... இப் பொழுது நான் அந்தப் பெயரை சற்று குழப்பி சொல்லிவிட்டேன். ஏன் அவர் ஒரு ஆங்கிலப் பெயரை தரித்துக்கொண்டு, அந்தப் பெயரை மறந்துவிடக்கூடாதா? நாம் அவருக்கு ஒரு எண்ணைக் கொடுப்போம். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? எனக்கு சரியாக புரியவில்லை, நம்மில் பாதி பேருக்கு அந்தப் பெயர் வாயில் வராது என்று நான் நினைக்கிறேன். 'ட்ராம்மாண்ட்'' அதுதான் சரியான உச்சரிப்பு என்று நான் எண்ணுகிறேன். மற்றும் சகோதரி சார்லெட் அவர்கள். உங்களில் யாராவது விரும்பினால், நீங்கள் அவர்களை உங்கள் சபையில் அழைத்து, பிரசங்கிக்கக் கேட்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 6அந்தப் பெண்மணி, சகோதரி சார்லெட் ஒரு சிறுமி. அவள் சற்று முன்னதாக மேடாவிடம் ஆப்பிரிக்காவில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பற்றிய சாட்சியைக் கூறிக்கொண்டிருந்தாள். பில்லி, அது முன் காலங்களை மீண்டும் நினைவுபடுத்தியது, அது ஆப்பிரிக்க மொழியைப் பேசியது போல் இருந்தது. எனவே, அங்கேயும் சரி, இங்கேயும் சரி, போராட்டமானது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாராவது சகோதரன் ட்ரம்மாண்ட் அவர்களையும், அவரது மனைவி சகோதரி சார்லெட்டையும், தங்கள் சபையில் விசேஷித்த கூட்டங்களுக்காக அழைக்க விரும்பினால், நீங்கள் சகோதரன் டோனி ஸேபிள் அவர்களுக்கு, எம் எல்ரோஸ் 7-3945 இல் அழைத்துத் தெரியப்படுத்துங்கள். ஊழியக்காரராகிய நீங்கள் யாராவது அதைக் குறித்துக்கொள்ள விரும்பினால் அப்படியே செய்யுங்கள். நான் நிச்சயமாக இச்சகோதரனை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். ஏனெனில் அவர் ஒரு நல்ல பிரசங்கியார் ஆவார். அவர் ஒரு உத்தமமான இளைஞர், அவருக்கு உற்சாகமூட்டி நல்ல ஆரம்பத்தை கொடுப்பது அவருக்கு அவசியமாயிருக்கிறது. அவர் அஞ்சாமை உள்ளவர், ஒரு நல்ல இளைஞர், அவரை நான் மிகவும் விரும்புகிறேன். இப்பொழுது நினைவில் வைத்துக்கொள்ள மீண்டும் கூறுகிறேன்: எம் எல்ரோஸ் நம்பர் 7-3945. இங்கே அவர் களுடைய முகவரி அச்சிட்ட அட்டை உள்ளது, இந்த நம்பரை குறித்துக்கொள்ள உங்களுக்கு இயலாமற்போனால், இன்றிரவில் வெவ்வேறு ஆராதனைகளுக்கு இடையில் வரும் இடைவேளை நேரத்தில் நீங்கள் இங்கே வந்து அந்த கார்டை எடுத்துக் குறித்துக் கொள்ளலாம். அவர்களுடைய நம்பரைக் குறித்துக் கொண்டு, அவர்களை தொலைபேசியில் அழைத்து, உங்களுடைய சபைகளில் ஒரு கூட்டத்திற்காக அவர்களை அழைக்க விரும்பினால், அதைத் தெரியப்படுத்தலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்தயாராவது அவர்களை அழைக்க விரும்புவார்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீங்களும் தெரியப்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் அமெரிக்கா எங்கிலும் ஊழியம் செய்து கொண்டு வருகின்றனர். அது குறிப்பிடத்தக்கதாக இருக்கவில்லையா? ஆப்பிரிக்கா தேசமானது, இங்கே அமெரிக்காவுக்கு மிஷனரிகளை அனுப்பவேண்டிய நிலையில் உள்ளது. இத்தேசம் ஆப்பிரிக்காவை விட மோசமடைந்து விட்டபடியினால், இங்கேதான் அவர்கள் தேவைப் படுகிற அளவுக்கு இருக்கிறது. 7எனவே, எத்தனை பேர்கள் இன்னொரு ஆண்டு முழுவதும் கர்த்தர் உங்களை பாதுகாத்தார் என்பதற்காக சந்தோஷமாயிருக்கிறீர்கள்? இங்கே, நாம் தானே, சாலையின் முடிவுக்கு வந்திருக்கிறோம். தேவன் தாமே நம்முடைய எல்லா பாவங்களையும், குறைகளையும் மன்னிக்கும்படியாக ஜெபிக்கிறேன். இதோ இந்த விஷயத்தை, நான் இப்பொழுது பிரசங்கிக்கத் தொடங்கு முன்னர், கூற விரும்புகிறேன். உங்கள் ஒவ்வொரு வருக்கும், மிகவும் வெற்றிகரமான, ஆசீர்வாதமான, ஆரோக்கியமான ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டுமென்று வாழ்த் துகிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக. நீங்கள் தாமே சரீரப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், பண காரியங்களிலும், பொருள் ரீதியாகவும் வளருவீர்களாக. தேவன் எதையெல் லாம் உங்கள் மேல் கொண்டுவர முடியுமோ, அதையெல்லாம் அவர் செய்ய வேண்டி நான் ஜெபிக்கிறேன். 8இப்பொழுது, நானும் கூட ஒரு புதிய ஆண்டை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறேன். எதிர்வரும் காலத்தில் என்ன இருக்கிறது என்பதை தேவன் மாத்திரமே அறிவார். இப்பொழுது தானே நம்முடைய தீர்மானங்கள் எல்லாம் நாம் செய்தாக வேண்டும். உலகம் பூராவிலும் இருந்து வரும் அழைப்புகளுக்காக, கர்த்தர் நம்மை எங்கே நடத்துவார் என்பதைப் பார்த்துக்கொண்டு, அதற்காக எல்லாவிதத்திலும் களத்தில் நிற்பதற்கான ஆயத்தங்கள் ஆயத்தமாக உள்ளன. நான் தவறாக நடந்துவிடாதபடி தடுத்தாட் கொள்ள தேவன் எனக்கு உதவி செய்யும்படி நீங்கள் முழு இருதயத்தோடு ஜெபிப்பதற்காக உங்கள் ஜெபங்களை நான் நிச்சயமாக நாடுகிறேன். எந்தவொரு விஷயத்திலும் நான் விரும்புவதெல்லாம், உத்தமமாயிருக்க வேண்டுவதையும், ஒருபோதும் தவறாக வழி நடத்தப்பட்டுவிடாதபடி இருக்கவும்தான். இப்பொழுது, எனக்கு ஒரு நல்ல ஆண்டு உண்டாயிருந்தது. 9அநேக சமயங்களில் மக்கள் தவறாக புரிந்து கொள்ளு கின்றனர். ''சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் முன்பு வழக்கமாக போகிற இடங்களுக்கெல்லாம், மற்ற ஊழியக்காரர்கள் செய்வது போல், நீங்கள் போகிறதில்லையே'' என்று கூறுகிறார்கள். ஒரு பாடத்தை நான் கற்றுக்கொண்டேன். நான் வேதத்திலிருந்தும், நமது கர்த்தரிடத்திலிருந்தும் கற்றுக்கொண்ட பாடமானது, இயேசுவானவர் தன்னை யாவரும் காண்பதற்குரிய காட்சிப்பொருளாக ஆக்கிக்கொள்ளவில்லை, என்பதுதான். அந்த விஷயத்தில் அவர் குறைவுபட்டார். அவரிடத்தில், யாவரும் தன்னைக் காட்சியாக காணவேண்டும் என்ற தன்மை இல்லை. அவருடைய சீஷர்களும் அப்படிப்பட்டவர்களாக இருக்கவில்லை. ஒருபொழு தும் அவர்கள் தங்களை காட்சிப் பொருளாக, காட்சிக்குரிய மனிதர்களாக, ஆக்கிக்கொள்ளவில்லை. அங்கே தான் நம்மில் அநேகர் இன்றைக்கு படகைத் தவற விட்டுவிட்டோம். ஒருவேளை இது என்னுடைய சொந்த அபிப் பிராயமாக இருக்கக்கூடும். நாம் யாவற்றையும் பற்றி பெரிதாக தம்பட்டமடித்துக்கொள்கிறோம். அது பரிசுத்தமான தொன்று என்று இருப்பதைவிட, பெரிதாக காட்சிக்குரியதாக தம்பட்ட மடித்துக்கொள்ளுதலாகவே இருக்கிறது. 10கர்த்தருடைய முதலாம் வருகையில், அவரை உண்மையாகவே ஏற்றுக்கொண்டவர்களை கவனித்துப் பார்த்தீர்களா? அதில் சிமியோனும் ஒருவன்; அவன் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கிக்கொண்டிருந்தான். ஒருவரும் அவனைக் குறித்து ஒன்றும் கேள்விப்பட்டிருக்கவேயில்லை. ஆலயத்தில் இருந்த குருடான அன்னாள், வனாந்திரத்தில் இருந்த யோவான் ஸ்நானன் ஆகியோரும் அப்படித்தான். இவர்கள் எல்லாம்..... யோவான் ஸ்நானன் தனக்கு ஒன்பது வயதானபோது வனாந்திரத்திற்குள் சென்றுவிட்டு, அவன் முப்பது வயதாகும் வரையிலும் மீண்டும் உலகுக்குத் தோன்றவேயில்லை. அதுவரை யிலும் அவன் வனாந்தரத்திலேயே இருந்து வந்தான். அவ்விதமான மனிதர், இரகசியமாக விசுவாசித்து, தாழ்மையாக இருந்து கொண்டு, கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந் தார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களுடைய கூட்டங்களைப் பற்றி பெரிதாக தம்பட்டமடித்துகக்கொண்டு, அதைப்பற்றிய பெரிய விளம்பரங்களைச் செய்து, இத்தனாம் மணி நேரம் என்றெல்லாம் போட்டு போஸ்டர்கள் பெரிதாக அடித்து பந்தா பண்ணிக்கொள்ள வில்லை. அந்தவிதமாக செய்திட விரும்புபவர்களுக்கு அதெல்லாம் சரிதான். ஆனால் எனக்கோ, அது கிறிஸ்துவுக்கேற்ற செய்கையாகப் படவில்லை . 11அவருடைய சகோதரர்கள் ஒரு சமயம் கூறியதை நான் அறிவேன். அவர்கள் அவரிடம், “நீர் இந்த அற்புத அடையாளங் களைச் செய்கிறீர், நீர் ஏன் எருசலேமுக்கு போய் வெளியரங்கமாக அவைகளைச் செய்யக்கூடாது? நாங்கள் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போகிறோம், நீரும் அங்கே வந்து, பிரதான ஆசாரி யனான காய்பாவை அழைத்து, மற்றும் அவரைச் சேர்ந்தவர்களையும் வரவழைத்து, அங்கே அவர்களுக்கு முன்பாக இவைகளையெல்லாம் ஏன் செய்யக்கூடாது? அவர்களும் அறிந்து கொள்ளட்டுமே!'' என்று கூறினார்கள். அவர்களுக்கு முன்பாக இவைகளைச் செய்யும், அப்பொழுது அவர்களும் உம்முடைய கிரியைகளை அறிந்துகொள்வார்களே'' என்றார்கள். ”நீரோ ஒரு கூட்டம் மீனவர் களோடும் மற்றும் இன்னபிற மக்களோடும் ஆற்றங்கரையில் உமது நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறீரே, அவர்களெல்லாம் கீழான மக்களாயிற்றே. நீர் ஏன் அங்கே போய் இவைகளைச் செய்யக்கூடாது? உலகம் அதைப் பார்க்கட்டுமே'' என்றார்கள். இயேசு “என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது'' என்று கூறினார். 12யோவான் ஒரு சமயம்..... யோவான் ஸ்நானன் அவனது வருகையைக் குறித்து வேதவாக்கியங்கள் முன்னுரைத்துள்ளன. அவன் வரும்பொழுது... ஏன், ஏசாயாகூட யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு எழுநூற்றுப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பாகவே வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று' என்று முன்னுரைத்திருக்கிறான். “மலைகளெல்லாம் ஆட்டுக் குட்டிகளைப் போல் துள்ளியது, இலைகளெல்லாம் கை கொட்டின. பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு சகல மலையும் குன்றும் தாழ்த்தப் பட்டு' என்று ஏசாயா கூறியுள்ளான். இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களெல்லாம் கூறப்பட்டுள்ளன! அந்நாட்களின் ஊழியக்ககாரர்களெல்லாம் எப்படியிருந் திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? இத்தீர்க்கதரிசன வாக்கியங்களை படித்த மக்கள், அவர்கள் இவ்வாறு கூறியிருக்கக் கூடும் : 'அந்த மகத்தான தீர்க்கதரிசி வரும்பொழுது, யாவரும் அவரை அறிந்து கொள்ளுவார்கள். தேவன் ஆகாயத்தில் விதானத்தை விரித்து, பரலோகத்தின் நடைக்கூடத்தை தேவன் முன்னுக்கு நீட்டி, அதிலிருந்து அக்கினி இரதத்தை தோன்றச் செய்து அதை கீழே இறங்கப் பண்ணி, ஒரு தூதனுடைய கரம் அவனை பூமிக்கு பாதுகாவலாக கொண்டு வந்து சேர்த்து, இவ்வாறு அவன் வெளிப்படுவான்'' என்று அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால், அவன் வந்தபொழுதோ, அவன் கவர்ச்சியற்ற முகத் தையுடைய பிரசங்கியாக, ஆட்டுத் தொலைப் போர்த்திக் கொண்டு, இடுப்பில் ஒரு தோல் துண்டை கச்சையாக உடுத்திக் கொண்ட வனாக வந்தான். ஒரு வேளை குளித்திருக்கவே மாட்டான் போலும். ஒரு வேளை மூன்று மாதத்திற்கொருமுறை அல்லது நான்கு மாதத்திற்கொருமுறையோ தான் குளித்திருக்கக் கூடும். அவன் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து, முழங்கால் அளவு சகதியாக இருந்த இடத்தில் நின்று கொண்டு, “மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபமாயிருக்கிறது'' என்ற பிரசங்கித்தான். அவன் ஒருபோதும் பெரு நகரங்கள் ஒன்றும் செல்லவேயில்லை. யாராவது அவன் பிரசங்கிப்பதைக் கேட்க விரும்பினால், அதற்காக யோர்தான் நதிக்கரைக்குத் தான் வரவேண்டும். அவர்கள் அதை விரும்பவில்லை. அவன் என்ன செய்தான்? அவன் தேசத்தை அசைத்தான். அவன் உலகை அசைத்தான். 13அங்கே ஒரு பெரிய அசைவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது, ஆனால் அந்த மக்களோ அதைப்பற்றி ஒன்றுமே அறியவில்லை. இயேசு வந்தபொழுது, அவர் ஒருபொழுதும் பெரும்புள்ளிகள் நடுவில் தன்னை காண்பித்துக்க கொள்வில்லை. அவர் தமக்கு சொந்த மானவர்களிடத்திற்கே வந்தார். அவர் வருகையை எதிர் நோக்கிக் கொண்டிருந்தவர்களிமிடம் மட்டுமே வந்தார். அங்கேதான் அசைவு வருகிறது. இன்றைக்கு அவர் அதைத்தான் செய்கிறார். தேவனால் அழைக்கப்பட்டவர்களிடம் தான் பரிசுத்த ஆவியானவர் வருகிறார், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நடுவில் மகத்தான தொரு அசைவானது உண்டாயிருக்கிறது. மகத்தான, வல்லமை யான காரியங்கள் அவர்கள் நடுவில் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது, ஆனால் உலகமோ அதைப்பற்றி ஒன்றுமே அறியாமல் இருக்கிறது. அவர்கள் இந்த எல்லாவிதமாக சொல்நயம், காண்பதற்கு நயமுள்ளதான காரியங்களையே பற்றி சிந்திக்கிறார்கள். உலகளாவிய வானொலி, தொலைக்காட்சி, ஒலி ஒளி பரப்புக்களும், பலகோடி டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்கள் மற்றும் இவ்வித மான காரியங்களையே அவர்கள் பெரிதாக நினைக்கிறார்கள். அவை தேவனுடைய பார்வையில் மதியீனமாக இருக்கின்றன. தேவன் இவ்வாறான பெரிய காரியங்களைப் பார்க்கிறதில்லை. மனிதன் எதை “மதியீனம்'' என்ற அழைக்கிறானோ, அதை தேவன் ”மகத்தானது“ என்று அழைக்கிறார். மனிதன் எதை மகத்தானது'' என்று அழைக்கிறார். ”பைத்தியமாயத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே, இழந்து போகப் பட்டவர்களை இரட்சிப்பது தேவனுக்குப் பிரியமாயிருந்தது“. 14இப்பொழுது யோவானைப் பற்றிப் பார்ப்போம். அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?'' அங்கே ஒரு மத வெறியன் இருக்கிறான். ஆட்டுத்தோலைப் போர்த் திக்கொண்டு வனாந்திரத்திலிருந்து வெளியே வந்துள்ள அவன், பார்க்கவே அசிங்கமாக இருப்பான். அவன் சேற்றில் நின்று கொண்டு பிரசங்கித்துக்கொண்டிருக்கிறான். யாராவது அவன் பேசுவதை போய் கேட்பார்களா?' என்று சொல்லியிருப்பார்கள். இயேசு வந்தபொழுது, “ஒரு மேசியா மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் குவியல் மேல், மாடுகள் படுத்துக் கொண்டிருக்கும் இடத்தில் பிறந்திருக்கிறாரா? முறைகேடான ஒரு தாயாரா அவருக்கு உண்டு என்று கூறுகிறாய்? அவரது, தாயும் தந்தையும் விவாகம் செய்து கொள்ளும் முன்பே, அவள் தாயாகிவிட்டாளே? அவர் முறைகேடாகப் பிறந்தாரே? அந்த ஆளா மேசியா?'' என்றெல்லாம் கேட்டிருப்பார்கள். ஓ, என்னே! பார்த்தீர்களா? ஆனால் அவரோ மகத்தானவராக இருந்தார். ஆனால் அவர்களோ அதை அறியவில்லை. பாருங்கள்? அவர்கள் அவரை அறியவில்லை. அதேபோல்தான், இன்றைய சுவிசேஷமும் மகத்தானதாக இருக்கிறது. சுவிசேஷமானது இதற்கு முன்பாக நடந்திராதபடி, பெரிய அசைவைக் கொண்டு வந்திருக்கிறது. அது கர்த்தருக் கென்று மீதியாயிருப்பவர்களிடத்தில் அசைவைக் கொண்டு வந்திருக்கிறது. அதுதான் சரி. அது அவர்களை ஆயத்தமாக்கி வைத்திருக்கிறது. 15அவர் தனக்கு சொந்தமானவர்களிடத்தில் வந்தார். அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சீஷர்களிடம், 'புறஜாதியாரிடத்தில் போகாதிருங்கள், காணாமற் போன இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கே போங்கள். நீங்கள் போகையில் உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். ஒரு பட்டணத்திற்கு நீங்கள் போகையில், அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிடில், உங்கள் பாதங்களிலுள்ள தூசியை தட்டியெறிந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டுப் போங்கள். நியாயத்தீர்ப்பின் நாளிலே அந்தப் பட்டணத் திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன்'' என்று கூறினார். அம்மனிதர்களை ஏற்றுக் கொள்ளாத நகரங்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கு சாம்பலாய் கிடக்கின்றன. அவர்களை ஏற்றுக் கொண்ட வைகள் ஒவ்வொன்றும் நட்சத்திரங்களைப் போல் இன்னும் நிலைத்து நின்று கொண்டிருக் கின்றன. அவ்வாறுதான் நடந்துள்ளது. பாருங்கள் அவர் பதிலளிப் பதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது அவருக்கு, ஆனால் எப்படியும் அவர் பதிலளிக்கிறார். கவலை வேண்டாம். ஓ, நான் இன்னமும் வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆரம்பிக்கவில்லை. இப்படியே போனால் அதற்குள் போகவே மாட்டேன் போலும். ஓ நான் அவரைக் கண்டு, அவரது முகத்தை நோக்கிட வாஞ்சிக்கிறேன் அங்கே அவரது இரட்சிப்பின் கிருபையைப்பற்றி என்றென்றும் பாடுவேன் மகிமையின் தெருக்களில் நான் எனது சத்தத்தை உயர்த்திடுவேன், அப்பொழுது கவலைகள் யாவும் தீரும், என்றும் மகிழ்ந்திட பரம் வீட்டில் சேர்வேன். 16நான் அதை விரும்புகிறேன். நாம் தலைகள் வணங்குவோம். அதற்க முன்பாக எழுந்து நிற்பீர்களா? வேதம் கூறுகிறது , “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும் போது, மன்னியுங்கள்'' இங்கே எத்தனை பேர்களுக்கு ஜெப விண்ணப்பம் ஒன்றுண்டு? அவர்கள் கைகளை உயர்த்திக் காட்டுவதின் மூலம் தெரியப்படுத்த லாம். தேவன் பார்க்கிறார், அவர் அது என்ன என்பதைப் பற்றி யாவையும் அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் பரம பிதாவே, நாங்கள் உம்முடைய தெய்வீக பரிசுத்தத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அணுகிறோம். “இயேசு'' என்ற நாமம் சகலத்திலும் போதுமானதாக இங்கே மனிதர் களுக்குள் அளிக்கப்பட்டுள்ளது, ”பூலோகத்திலும் பரலோகத்திலும் உள்ள குடும்பங்களுக்கு அந்நாமமே பெயராக சூட்டப்பட்டுள்ளது'' 17எங்களுடைய நன்றி நிறைந்த ஸ்தோத்திரத்தை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்று நாங்கள் ஜெபிக்கிறோம், கர்த்தாவே. முதலாவதாக, துவக்கமாக, நாங்கள் இன்றிரவு ஆராதனையில் உமக்கு துதி செலுத்திக் கொண்டும், உம்முடைய வார்த்தையை ஆராய்ந்து கொண்டும், “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதின் அர்த்தத்தையை அறிந்து கொண்டும், இப்படியாக இந்த மரித்துக் கொண்டிருக்கும் ஆண்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக் கிறோம். நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு ஏராளமான காரியங்கள் உண்டு, அவைகளை தாளில் எழுதினாலும் இடம் போதாவது. சிறு சிறு ஆபத்துக்களில் நாங்கள் தப்பியது, மயிரிழை யில் உயிர்தப்பியது போன்றவைகள் இந்த கடந்து செல்லும் ஆண்டில் எங்களுக்கு இருந்தன. நீர் மாத்திரம் எங்களோடு இருந் திராவிடில் சாத்தான் அவ்வேளைகளில் எங்கள் ஜீவனை திக்கு முக்காடச் செய்து அழித்திருப்பான். இதனால் தான் எங்களால் தொடர்ந்து சென்று கொண்டிருக்க முடிகிறது. நாங்கள் இவ்வுல கில் பிறந்து வளர்க்கப்பட்டது எல்லாம், உம்மை கனம் பண்ண வும் மகிமைப்படுத்தவும் மாத்திரமே என்று நாங்கள் விசுவாசிக் கிறோம். கர்த்தாவே. பிதாவே, எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நெடுக நாங்கள் செய்துள்ள ஒவ்வொரு மீறுதல்களையும், ஒவ்வொரு பிழையையும் நீர் மன்னிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களு டைய பிழைகளை நாங்கள் அறிக்கையிட்டுவிட்ட பிறகு, அவை களை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஆழ் மறதிக் கடலில் மீண்டும் தோண்டி எடுக்கக்கூடாதபடி புதைத்து விட்டு, நாங்கள் தொடர்ந்து பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக பரிபூரண மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாகிய இலக்கை நோக்கி நாங்கள் தொடரட்டும், இதை எங்களுக்குச் செய்தருளும், பிதாவே. உம்முடைய ஊழியக்காரர்கள் பேசும் பொழுது, அவர்கள் ஒவ்வொருவரையும், நீர் ஜீவனின் ஆவியால் அபிஷேகித்து, அவர்கள் இது வரையிலும் பிரசங்கித்திராத வண்ணம் இன்றிரவில் சபையில் செய்திகளை கொண்டு வந்து பிரசங்கிக்கட்டும். 18இச்சிறிய கூரையின் கீழாக நாங்கள் கூடி வந்திருக்கிறோம். அதற்காக தாங்கள் நன்றியறிதலோடு இருக்கிறோம். கர்த்தாவே. நாங்கள் இங்கே அமருவதற்காக எங்களுக்கு அவசியம் தேவைப் படுகிற அனலுண்டாக்கும் கணப்பு உண்டாயிருப்பதற்காகவும், எங்கள் தலைக்கு மேல் அமைந்திருக்கிற கூரைக்காவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், கர்த்தாவே. எங்களுடைய பொக்கிஷங்கள் இவ்வுலகில் இல்லை, வரப் போகிற உலகில் அவைகள் உள்ளன. தேவனே, அவைகளை நாங்கள் அங்கேதான் சேர்த்து வைக்கிறோம், அங்கே திருடன் கன்னமிட்டு திருடுவதில்லை. பூச்சி அவைகளை அரிக்கிறதுமில்லை, ஏனெனில் எங்களுடைய பொக்கிஷங்களெல்லாம் நித்திய ஜீவனா யிருக்கிறது. பிதாவே, எங்களுடைய வாழ்நாட்காலம் முழுவதும் அவைகள் யாவற்றையும் நாங்கள் போற்றிப் பேணட்டும், பிதாவே. தகுதியுள்ள ஊழியக்காரர்களாக எங்களை ஆக்கியருளும். நாங்கள் உமக்கு முன்பாக தாழ்மையுள்ளவர்களாயும், இனிமை யானவர்களாயும் இருப்பதற்காக, எங்கள் ஜீவியத்தை விட்டு பகைமை, கசப்புணர்ச்சி ஆகியவற்றின் எல்லா வேர்களையும் அகற்றியருளும், கர்த்தாவே. இதை அளித்தருளும், கர்த்தாவே. வரப்போகும் ஆண்டு, இது வரையிலும் இருந்த ஆண்டுகளைவிட மேலாக, மகத்தானதாக எங்களுக்கு இருக்கட்டும். அதை எங் களுக்கு அளித்தருளும். மேற்கொண்டு உம்முடைய செய்திக்காக நாங்கள் காத்திருக்கையில், இன்றிரவில் உம்முடைய வார்த் தையை இப்பொழுது எங்களுக்கு தந்தருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 19இங்கிருந்து கொண்டு, அங்குள்ள அந்த கடிகாரத்தைப் பார்ப்பது கடினமாய் எனக்கு உள்ளது. நான் என்னுடைய சகோதர் களை காத்திருக்க வைக்க விரும்பவில்லை. எனவே நான் ஆராதனை யின் இந்த பாகத்தை முடிந்த அளவு விரைவாக முடிக்க முயற் சிப்பேன். ஒரு வேளை நம்மால் இதை முடிக்க முடியவில்லை யெனில், நாளை காலை, கர்த்தருக்கு சித்தமானால், இதைக் தொடர்ந்து பார்ப்போம். அதன்பிறகு, சகோதரன் நெவில் அவர்கள் வரவில்லையெனில், அல்லது என்னவானாலும், அப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், ஞாயிறு ஆராதனையை நடத்த நான் இங்கேயிருக்க முயற்சிப்பேன். 20இப்பொழுது, நீங்கள் மறக்கவேண்டாம் ஜெபி, ஜெபி அது ஒன்றே வழி உயர் ஸ்தலத்தை போய்ச்சேர ஜெபி, ஜெபி, விசுவாச ஜெபமே தேவாசீர்வாதங்களை இறங்கப்பண்ணும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அது ஒன்றே. நாம் அதை சேர்ந்து பாடுவோம். அதை நாம் உண்மையாகவே கேட்போம். நமக்கு ஏராளமான சமயம் இருக்கிறது. ஜெபி, ஜெபி அது ஒன்றே வழி உயர் ஸ்தலத்தில் போய்ச் சேர்ந்திட ஜெபி, ஜெபி, விசுவாச ஜெபமே தேவாசீர்வாதங்களை இறங்கப்பண்ணும் எனவே, விசுவாச ஜெபமே தேவாசீர்வாதங்களை இறங்கப் பண்ணு மென்றால், நாம் தொடர்ந்து ஜெபிக்கக்கடவோம். இன்றிரவில் நாம் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். ஏனெனில் தேவனு டைய இராஜ்யத்தில், கடந்த ஆண்டில் காணாத புதிய முகங்கள் நமக்கு இப்பொழுது இருக்கிறது. எப்பொழுதும், இன்னும் அதிக மதிகமானவர்கள் சேர்க்கப்படட்டும் என்று நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். மறுபக்கத்தில் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பாதி கூட நமக்கு ஒருபோதும் கூறப்படவில்லை. 21நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் 4ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். யாருக்காவது வேதாகமம் தேவையா? வசனங்கள் வாசிக்கை யில் அதைத் தொடருவதற்காக உங்களுக்குக் கொடுக்க இங்கே சில வேதாகமங்கள் உள்ளன. இப்பொழுது வாயிலோரில் ஒருவர் இங்கே வரட்டும், இங்கே நமக்கு வேதாகமங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அறங்காவலர்களில் ஒருவர், அல்லது வாயிலோரில் ஒருவர் உடனே இங்கே வாருங்கள். சகோதரன் சேபிள் இன்னும் ஒருவர் கூட வரட்டும். நீங்கள் இரு மருங்கிலும் கொடுக்க விரும்பினால், அப்படியே நடுவிலுள்ள நடைபாதை வழியாக கடைசி வரை செல்லலாம். யாருக்காவது ஒரு வேதாகமம் எங்களோடு வேதவசனங்களை தொடருவதற்கு தேவைப் பட்டால், தேவைப்படுகிறவர்களுக்கு அதைக் கொடுங்கள். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத் திற்கு நீங்கள் திருப்பும்படி நாம் விரும்புகிறோம். 22இப்பொழுது பின்னால் அமர்ந்திருக்கிறவர்கள் இங்கே முன்னால் வந்து உட்கார விரும்பினால், நீங்கள் முன்னுக்கு வந்து உட்காருவதற்காக இன்றிரவில் ஏராளமான இடம் இருக்கிறது. உங்களுக்கு வசதியானபடி உட்காருங்கள், பாடத்தில் கவனம் செலுத்துங்கள், நாம் கூடிவந்திருக்கிற இத்தருணத்தில் நமது பாடத்தை படித்து ஆராய எனக்கு உதவி செய்யுங்கள். இங்கே இருக்கைகள் உள்ளன, ஒரு தம்பதி வருவதை நான் காண்கிறேன். இந்த இடத்தில் இரு இருக்கைகள் உள்ளன. ஒருவருக்கு இங்கே ஒரு இருக்கை உள்ளது. இங்கே பின்னாலும் இருக்கைகள் உள்ளன. காற்றோட்டமியக்கும் பொறி (Blower) எங்கும் வியாபமாக இருக்கிறது என்று கருதுகிறேன். ஏழு சபைக்காலங்களைப் பற்றி நமது கடந்த எட்டு நாட்களின் பாடத்தை எத்தனை பேர் இரசித்தீர்கள்? உங்களுக்கு நன்றி. அது என்னை மிகவும் அருமையாக உணரச் செய்கிறது, ஏனெனில் நானே மகத்தான ஆசீர்வாதத்தை அவைகளிலிருந்து பெற்றேன். 23இப்பொழுது, இன்றிரவில், 4ம் அதிகாரத்தோடு நாம் முடித்துக்கொள்கிறோம். யோவான் லவோதிக்கேயா சபைக் காலத் தோடு பேசியிருக்கிறான். ஏனைய சபைக்காலங்களைக் காட்டிலும் லவோதிக்கேயா சபைக்காலம் தான் மிகவும் அதிகமாக குளறுபடி செய்கிறதாக இருக்கிறது. லவோதிக்கேயா சபைக்காலத்தின் இறுதிப் பகுதியில், மிகவும் பரிதாபமானதொரு காரியத்தை நாம் பார்த்தோம்; அது இயேசு தமது சொந்த சபைக்கு வெளியே நின்று கொண்டிருத் தலாகும். ஏனெனில் அங்கிருந்து அவர் வெளியே தள்ளப்பட்டு விட்டார். அவர் மீண்டும் உள்ளே நுழைய தன் சொந்தவாசலுக்கு வெளியே நிற்பதும் அவரது சொந்த சபையே அவரை வெளியே தள்ளிவிட்டிருக்கிறதும், அவர் அவர்களை இரட்சிக்க வேண்டி மீண்டும் உள்ளே பிரவேசிக்க முயன்று கொண்டிருப்பதுமான பரிதாபமான காட்சியைப் பற்றிய வேத வாக்கியங்களைப் போல வேறு எதையும் நான் வாசித்திருக்கவில்லை. “எவனாவது கதவைத் திறந்தால், என்னுடைய சொந்த வீட்டிற்குள் நான் மீண்டும் திரும்ப என்னை விடட்டும், நான் அவனோடு போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.'' அது துயரத்தை ஏற்படுத்துகிற காட்சியாக இருக்கவில்லையா? பரலோகத்தின் தேவனானவர் தனது சொந்த சபையாலேயே, அவர்களது சமயக் கோட்பாடுகளினாலும், ஸ்தாபனங்களாலும் அவர்கள் செயல்படும் விதத்தினாலும் வெளியே தள்ளப்பட்டிருக்கிறார், அவர்களுடைய சமயக் கோட்பாடுகளையே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 24இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்ததைப் போலவே அது இருக்கிறது. அவர்கள் ஒரு கொலைகாரனாகிய பரபாஸை ஏற்றுக்கொண்டு, இயேசுவை சிலுவையில் அறைந்தார் களே, அதுபோல் உள்ளது. தங்கள் மத்தியில், ''ஒரு கொலையாளி'' என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவனை சுதந்திரமாக அவிழ்த்து விட்டனர். ஆனால் ஜீவனை அளிக்கக் கூடிய இயேசு கிறிஸ்து வையோ நிராகரித்தனர். அதே காரியத்தைத் தான் ஒவ்வொரு ஸ்தாபனமும், பெந்தெ கொஸ்தே ஸ்தாபனமும் இன்றைக்குக் கொண்டிருக்கின்றன. அந்த ஸ்தாபனங்களில் போஷிக்கப்படுகின்றனர். ஸ்தாபனத்தை ஸ்தா பித்ததுமே உடனடியாக அது மரித்து விடுகிறது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், அங்கே ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட எந்தவொரு சபையும் உடனே மரித்ததைத் தவிர வேறு எதுவும் அதற்கு நடக்கவில்லை என்பதைக் காணலாம். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட உடனேயே அவர்களை விட்டு அற்புத அடையாளங்கள் நீங்கிப் போயின. கர்த்தராகிய இயேசு வை ஏற்றுக்கொண்டு, தங்களில் ஜீவனைப் பெற்றுக் கொள் வதற்குப் பதிலாக, அவர்கள் பின்னுக்குத் திரும்பி, தங்கள் மத்தியில் பரபாஸை அவிழ்த்துவிட்டனர். அது மோசமான ஒன்றாக இருக்க வில்லையா? தேவன் தன் சபையை விட்டு வெளியே தள்ளப்பட் டிருப்பதும், அவர் வெளியே நின்று கொண்டு இக்கடைசி சபைக் காலத்தில் கதவைத் தட்டிக் கொண்டு, உள்ளே பிரவேசிக்க முயன்று கொண்டிருப்பதும் ஒன்றும் ஆச்சரியமாய் இல்லை. 25வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகமானது மூன்று பாகங் களாக பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகமானது முதல் மூன்று அதிகாரங்களில் உள்ளது. அது சபையைக் குறித்தவை யாகும். சபைகளின் தூதர்களுக்கு அளிக்கப்பட்ட செய்திகளாகும். அவைகள் பின்பு அவள், 3-ம் அதிகாரத்தில் மறைத்து விடுகிறாள்; பின்பு 19ம் அதிகாரத்தில், தான் மீண்டும் தோன்றுகிற வரையிலும், இடையில் வேறு எங்கும் காணப்படவில்லை. அங்கே தான் அவள் திரும்பி வருகிறாள். அதற்கிடைப்பட்ட காலத்தில் தேவன் யூத ரோடு இடைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதன்பிறகு, அப்பொழு திலிருந்து, மகத்தான புதிய எருசலேம் நகரம் வருவதற்கும், யூத ஜனங்கள் முத்திரையிடப்படுவதற்கும் இடைப்பட்ட கடைசி காலமாக இருக்கிறது. 26எனவே இன்றிரவில் நான்... இதற்கு பிறகு, உடனே யோவான் பத்மு தீவில் கண்டான்... கடற்கரையிலிருந்து எவ் வளவு தூரத்தில் பத்மு தீவானது இருந்தது என்பதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? எவ்வளவு தூரத்தில் அது இருந்தது? கரையில் இருந்து 30 மைல்கள் தூரத்தில் அது இருந்தது. பத்மு தீவின் சுற்றளவு எத்தனை தூரம்? அதன் புவியியல் அறிந்த சிலர் அதைப் பற்றி நினைவில் வைத்திருக்கிறீர்களா? அது பதினைந்து மைல்கள் சுற்றளவுள்ளதாக இருந்தது. அத்தீவை ரோமனியர்கள் குற்றவாளிகளை நாடு கடத்துவதற்காக பயன்படுத்தி, அங்கே சிறைக்கைதிகளை வைத்திருந்தார்கள். யோவான் அத்தீவில் எதற்காக வைக்கப்பட்டிருந்தான்? அவன் அப்படி என்ன செய்து விட்டான் அங்கேயிருப்பதற்கு? எதையாவது திருடி விட்டானா? இல்லை. அவர்கள் அவனை அங்கே போட்டு விட்டார்கள். ஏனெனில், அவர்களை பார்வையில், அவன் மக்களுக்கு தொந்தரவு செய்து விட்டதாகவும், ஏதோ தீமையான காரியத்தை செய்து விட்டதாகவும் கருதினார்கள். அவன் அப்படியெதுவும் செய்து விடவில்லை. அப்படியெனில், அவன் எதற்காக அங்கே வைக்கப் பட்டிருந்தான்? தேவனுடைய வார்த்தையினிமித்தமும், தன்னு டைய சாட்சியினிமித்தமும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்த தினிமித்தமும்தான் அவன் அங்கே வைக்கப்பட்டிருந்தான். 27ஒரு கிறிஸ்தவனுக்கு மிகச் சிறப்பானதொன்று சம்பவிக்க வேண்டுமெனில், இது மாதிரியான அனுபவம் இல்லாமல் அது நடக்க முடியுமா? இல்லை, இல்லை. எனவே, தேவன் யோவானை தனியே அத்தீவில் போய் இருக்கும்படி செய்தது எதற்காக? இந்த வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்தை நமக்கு அளிக்கத் தான். தேவனால் பிசாசினுடைய கண்களை எந்த நேரத்திலும் மறைத்து விட்டு காரியம் செய்ய முடியும். அவர் விரும்பினால் முடியும். அவருக்கு இயலுமல்லவா? அவரால் மிக எளிதாக இயலும். நான் அவரை நேசிக்கிறேன். ஏனெனில் நான் புத்திசாலியாக இருக்கத் தேவையில்லை. நான் புத்திசாலியாக இருப்பேனெனில். ஒருவேளை அதைப்பற்றியெல்லாம் நான் மறந்து விடுவேன். தேவனை விட அதி புத்திசாலி வேறு யாரும் கிடையாது என்பதை நான் அறிவேன். எனவே நான்... எனக்கு உள்ள அனைத்தையும், நான் என்னையே அவருக்கு அர்ப்பணித்து, அவர் என்ன செய்யக் கூறுகிறார் என்பதைப் பார்க்கிறேன். அவ்வளவுதான் சில சமங் களில் என் கருத்துக்கு அது மிகவும் முரணாக இருக்கிறது. ஆனால் நான் ஒன்றை அறிவேன், அதென்னவெனில், அவர் என்னை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதே. அவர் புத்திசாலியாக இருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை அவர் அறிந்தே யிருக்கிறார். நான் அப்படியில்லை. எனவே, நான் அவரை கிரியை செய்ய விட்டுவிடுகிறேன். அதன் பிறகு நான் .... அவ்வாறுதான் உள்ளது, சகோதரன் நெவில் அவர்களே, ஆம் ஐயா, அவர் கிரியை செய்ய விட்டுவிடுங்கள். பாருங்கள்? அவர் தான் என்ன செய்கி றோம் என்பதை அறிந்தேயிருக்கிறார். நான்; அறியேன். பாருங்கள்? எனவே, நான் எந்த பெரிய பகட்டான காரியத்தையும் பெற்றிருக்க முயற்சிப்பதில்லை. அப்படியே நான் என்னையே தாழ்த்தி, “இதோ நான் இருக்கிறேன், பிதாவே, எந்த வேளையில் நீர் விரும்பினா லும்...'' என்கிறேன். எனவே அவ்வாறு தொடர்ந்து செல்லுங் கள், அப்படி செய்தால் அது முடிவில் சரியாகத் தான் இருக்கும். 28எனவே, அங்கே யோவான் இருந்திருக்காவிடில், யோவான் அத்தீவுக்குச் சென்றிருக்காவிடில், நமக்கு வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் கிடைத்திருக்காது. தேவன் நமக்கு வெளிப் படுத்தின விசேஷ புத்தகத்தை கொடுப்பதற்காக அது அவருடைய வழியாயிருக்கிறது. அவன் அங்கே மூன்று ஆண்டுகள் இருந்தான் என்று எண்ணுகிறேன்; வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை அங்கே எழுதினான். அழைப்பு விடுக்கும் கடைசி வசனத்தில் நாம் யோவானை வெளி.3:22-ல் விட்டு வந்தோம். ''ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்.'' 29இப்பொழுது 4ம் அதிகாரத்தில் ஆரம்பிப்போம். “இவைகளுக்கு பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறி வா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. வெளி.4:1 நாம் ஒவ்வொரு வசனமாகப் பார்க்கப்போகிறோம். நான் இங்கே அநேக வேத வாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன், அவைகள் எழுதப்பட்ட ஒரு புத்தகம் உள்ளது. அதற்குள்ளாக நாம் எந்த அளவு பார்க்கப் போகிறோம் என்பதை நான் அறியேன். கர்த்தர் வழி நடத்துவராக. இப்பொழுது, கவனியுங்கள், வார்த்தை யானது இவ்வாறிருக்கிறது. “இவைகளுக்குப் பின்பு” (சபைக்காலத்திற்குப் பிறகு ) சபையானது எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, பூமியில் நடைபெறப் போகிறவைகள் தான் இவ்வாறு இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகள்'' என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இச்சம்பவங்கள் இஸ்ரவேலர் சம்மந்தப்பட்ட வைகளாக இருக்கப்போகின்றன. சபைக் காலத்திற்குப் பிறகு, சபைக் காலங்களுக்குப் பிறகுள்ளவைகள் இவைகள். அவர்கள்..... இதிலிருந்து, வெளிப்படுத்தின விசேஷத்தின் 19ம் அதிகாரம் வரையிலும் மணவாட்டி ஒருபொழுதும் காட்சியில் தோன்று வதேயில்லை. 19ம் அதிகாரத்தில் தான் அவள் தன் மணவாளனோடு திரும்பி வருகிறாள். அக்கலியாணத்திற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்! 30நாம் அதை வாசிப்போமாக. நாம் இவ்வேத வாக்கியங்களை எடுத்துக்கொள்கையில், நீங்கள் அதை வாசிக்க விரும்புகிறீர்களா? நல்லது, நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரம் எடுத்துக்கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரம், 7ம் வசனத்தில் ஆரம்பிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரம், 19ம் அதிகாரம் வருகிற வரையிலும் சபையானது மீண்டும் அதற்கிடையில் ஒருபோதும் தோன்ற வேயில்லை. இவ்வதிகாரத்தில்தான் சபையானது மீண்டும் தோன்றுகிறது. ''நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். வெளி.19:7 62. ஓ, நடுநிசி வரையிலும் அதின் பேரில் என்னால் பிரசங்கிக்க முடியும், ஆயினும் அதில் பாதிகூட விவரித்திருக்க முடியாது. “அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள்.'' என்ற வசனத்தைப் பாருங்கள். 31சார்லி, நெல்லி மற்றும் உள்ள யாவரோடும் மற்றும் ராட்னி யோடும் அன்றொரு நாளிலே, நாம் பேசிக் கொண்டு வந்தோமே, பார்த்தீர்களா? எலிசா அந்த சால்வையை எலியாவின் மேல் போட் டான் .... அல்லது எலியா சால்வையை எலிசாவின் போட்டான். எலியா மீண்டும் தன் கையை நீட்டி அவன் மேல் போட்ட சால்வையை திரும்ப எடுத்து, தன்மேல் போட்டுக் கொண்டு, யோர்தானைக் கடந்து, மலையின் மேல் ஏறி, அக்கினி இரதத்தில் ஏறிச்சென்று, சால்வையை கீழே போட்டு விடுகிற வரையிலும், தன்மேல் போட்டுக்கொண்டு நடந்து திரிந்தான். ஒரு கிறிஸ்தவன் முதலாவதாக இரட்சிக்கப்படுகிற பொழுது, அவனது விசுவாசமானது கிறிஸ்துவினிடமாகத் திரும்பு கிறது. அப்பொழுது அவன் தனக்குத் தானே ஒன்றைச் செய்ய வேண்டியவனாயிருக்கிறான். இரட்சிக்கப்பட்டபிறகு அவன் எல்லா அசுத்த பழக்கங்களிலிருந்தும் தன்னை சுத்திகரித்துக் கொள்ள வேண்யடிவனாயிருக்கிறான். 'பாரமான யாவற்றையும் தள்ளி விட்டு ' அவள் தன்னைத் தானே ஆயத்தப்படுத்திக் கொள்ளுகிறாள். மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறாள். 32நாம் தொடர்ந்து போகிறதற்கு முன்பாக, ஒரு சிறு கதை எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது, அதை சொல்லியாக வேண்டும். இங்கே மேற்கிலே, அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த மகத் தான ஆர்மர் அண்ட் ஸ்விஃப்ட் பேக்கிங் கம்பெனி என்று நிறுவனம் இருந்தது. அவர்கள் எவ்வாறு தொழில் செய்தனர் என்றால், அவர்கள் அங்கே வந்து, கால்நடைகளையும், அவற்றிற்கான மேய்ச்சல் நிலங்களையும் வாங்குவார்கள். அவைகள் பெரும் மதிப்புள்ளவைகள். அங்கிருக் கும் எல்லா சிறு மேய்ச்சல் நிலங்களையும் வாங்கிவிடுவார்கள். அதினால் அவர்களிடம் பல மில்லியன் ஏக்கரா மேய்ச்சல் இருக் கின்றன. அதில் அவர்கள் உயர்ந்த இன ஹியர்ஃபோர்ட் ரக பசுக்களை பிரிவுகளில் மேய்த்தார்கள். அவர்களுக்கென்று சொந்தமான இரயில் பாதைகள் உண்டாயிருந்தபடியினால், அதில் கால் நடைகளை ஒரு மேய்ச்சல் நிலத்திலிருந்து இன்னொரு மேய்ச்சல் நிலத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த ஆர்மர் அண்ட் ஸ்விஃப்ட் கம்பெனிக்கு ஒரு பெரிய மேய்ச்சல் நிலம் இருந்தது. அவர்களுக்கு அங்கே கண்காணிப் பாளர் ஒருவர் இருந்தார். அவர் அந்த மேய்ச்சல் நிலத்தின் மேல் பொறுப்பாக இருந்தார். அவருக்கு நான்கு அல்லது ஐந்து குமாரத்திகள் இருந்தனர். ஒரு நாள் அந்த கம்பெனி முதலாளிகளில் ஒருவருடைய மகன் அந்த மேய்ச்சல் நிலத்திற்கு விஜயம் மேற் கொள்ள விருக்கிறான் என்பதை அறிந்து கொண்டார்கள். அவன் திருமணமாகாத ஒரு இளைஞனாவான். அவன் வந்தவுடன் அவன் மையல் கொள்ளும்படி மயக்கிட வேண்டுமென அவர்கள் உறுதி யாக இருந்தனர். எனவே அவர்கள் யாவரும் அவன் வருகைக்காக எல்லாவிதமான ஆயத்தங்களையும் செய்தார்கள். 33அவன் அங்கே வந்து சேருகையில், அவர்கள் அவனை போய் சந்திக்க இருந்தார்கள். அவர்கள் தங்கள் சிறிய குஞ்சம் தொங்க விடப்பட்டுள்ள ஆடைகளையணிந்து கொண்டு, தலைக்குப் பின் தொங்கிக் கொண்டிருக்கும் தொப்பியை அணிந்து கொண்டிருந் தனர். ஆடையணிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் சரியான மேற்கத்தியர்களுக்கேற்றவிதமாக இருந்தனர். அவர்களில் ஒரு பெண் தான் அந்தப் பையனை அடைய வேண்டும் என்று இருந்தனர். அப்பெண்களுக்கு உறவினளான ஒரு பெண் அங்கே யிருந்தாள், அவளது தாய், தந்தை இருவருமே மரித்துவிட்டிருந் தனர். அவள் அவர்களுக்கு உறவினளாக இருந்தாள். அவள் அங்கிருந்த யாவருக்கும் ஒரு அடிமையைப் போல் இருந்தாள். அவள் தான் அங்கே பாத்திரம் கழுவுதல் உட்பட அனைத்து மட்ட மான வேலைகளையெல்லாம் செய்ய வேண்டியவளாய் இருந்தாள். அவளுக்கு ஆடைகள் இல்லாததால், பிறர் உபயோகித்துவிட்டுக் கொடுப்பவைகளையே அவள் அணிந்து வந்தாள். 34ஆகவே, அவ்விளைஞன் வந்து சேரும் நேரம் சமீபித்தபோது, அப்பெண்கள் யாவரும் தங்களுடைய சாரட் வண்டிகளில் ஏறிக் கொண்டு, ஸ்டேஷனுக்கு அவனை வரவேற்கச் சென்றார்கள். அவர்கள் துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க, குதிரைகள் கனைப்புடன் கூடிய வரவேற்பு நல்கினார்கள். பிறகு அவனை மேய்ச்சல் நிலத் திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அங்கே அவர்கள் அந்த இரவில் பெரிய நடனம், விருந்து போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் வைக்கோல் போர் உள்ள இடங் களுக்குச் சென்று, கால்நடைப் பட்டிக்குச் சென்று, பாடல்கள் பாடி, நடனமாடி இரவு முழுவதும் களி கொண்டாடினார்கள். அவ்விளைஞன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்தான். 35இந்த எளிய உறவினளோ ..... இக்காரியத்தை ஒரு விஷயத்துடன் ஒப்பிடப் போகிறேன். மிகவும் பிரமாதமாக உடையுடுத்திக்கொண்டும், கூர்மையான கோபுர கம்புகளையுடைய ஆலயங்களையுடைய நமது உறவினர் களாகிய சபைகள் உள்ளனவே, அவைகள், பெந்தெகொஸ்தே அனுபவம் உள்ளவர்களுக்கு, மோசமான பெயர்கள் என்ன வெல்லாம் உண்டோ அதையெல்லாம் அவர்களுக்கு சூட்டுகிறார் கள். அது மிகவும் தவறான காரியமாகும். அவர்களும் கூட தவறான காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால் அதெல்லாம் வெளியே தெரிய வராது, பாருங்கள். அவர்கள் மேட்டுக்குடியினராக இருப்ப தால், அவர்களுடைய காரியங்கள் வெளியே வராது. ஆனால் எப்பொழுதாவது ஒரு பெந்தெகொஸ்தே ஊழியக்காரர் ஒரு பிழை செய்து விட்டால், சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுவேன், அச்செய்தியை தேசம் பூராவிலும் செய்தித்தாளில் போட்டு தெரியப்படுத்தி விடுவார்கள். ஆம், ஐயா. ஒரு பெந்தெகொஸ்தே சகோதரன் ஒரு குழந்தைக்காக ஜெபித்து, அக்குழந்தை இறந்து விட்டால், நாட்டில் உள்ள ஒவ்வொரு செய்தித்தாளும், “தெய்வீக சுகமளித்தல் ஒருமத வெறிக்கொள்கைதான்' என்று தூற்றுவார்கள். நல்லது, அப்படியென்றால், ஏன் டாக்டர்களால் காப்பாற்ற முடியாத கேஸ்களை ஒவ்வொன்றாக செய்தித்தாளில் போடு வதில்லை? இவர்களுக்கு ஒரு நியாயம், அவர்களுக்கு வேறொரு நியாயமா? பாருங்கள்? எனவே, அவர்கள் டாக்டர்களால் பிழைக்க வைக்கமுடியாத கேஸ்களையெல்லாம் செய்தித்தாளில் வெளியிடுவார்களென்றால், அப்படி மரித்தவர்களின் விபரங்களை வெளியிட பத்திரிக்கைகளின் பத்திகளில் இடம் போதாது. நான் கல்லறைக்குச் சென்று, 'தெய்வீக சுகமளித்தலின் கீழாக மரித்தவர்கள் யாவரும் எழுப்புங்கள்'' என்றும் பின்பு, “வைத்திய சிகிச்சையின் கீழாக மரித்தவர்களெல்லாம் எழும்புங்கள்'' என்றும் கூறுவேனென்றால், முந்தினது ஒன்று என்றால், பிந்தினது பத்து இலட்சம் என்ற விகிதத்தில் தான் இருக்கும். எனவே அவர்கள் ஒருவரைக் குறை கூறினால், மற்றவர்களுடைய குறையை விமர்சிக்கட்டும். அது தான் சரி. ஆனால் அவர்கள் ஒரு ஆண்டில் பல இலட்சக்கணக்கில் மக்களை மருந்துகளாலும், அறுவை சிகிச்சைகளாலும் கொன்று விடுகிறார்கள், ஆனால் நீங்கள் அதைப்பற்றி ஒரு வார்த்தையும் கேள்விப்படுகிறதில்லை பாருங்கள்? 36எனவே இச்சிறிய பெண், எல்லாவித கடினமான வேலையும் அவளுக்கு இருந்தது. எனவே, ஒரு நாள் இரவில், இரவு உணவு முடிந்தபிறகு, அவர்கள் நடனமாடிய பிறகு, அப்பெண்கள் ஒவ் வொருவராக தங்களை அழகுபடுத்திக் காண்பித்த பிறகு... அவ் வெளிய பெண்பழைய கந்தலான ஆடையை அணிந்து கொண்டு, உணவுக் கூடத்தில் உட்கார்ந்து கொண்டு, இரவு உணவு வேளைக் குப் பிறகு, உணவு பரிமாறப்பட்ட பாத்திரங்களையெல்லாம் அவள் கழுவிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிய தண்ணீரை கொல்லைப் புறத்தில் கொண்டுபோய் கொட்ட விரைந்து சென்றாள். அவள் அவ்வேலையை முடித்துவிட்டு, கால்நடைப்பட்டியின் பக்கமாக திரும்பிய பொழுது, இங்கே அந்த இளைஞன் பட்டியின் வேலியில் சாய்ந்து கொண்டு நின்றான். அவன் அவளை நோக்கி, ''ஹலோ'' என்று அழைத்தான். அவள் மிகவும் நாணமடைந்தாள், ஏனெனில் இவ்விளைஞன் அம்மேய்ச்சல் நிலங்களின் முதலாளியின் மகன் ஆவான். அவன் தன் கையிலிருந்த பாத்திரங்களை கீழே தவறவிட்டுவிட்டாள். அவன் தான் அணிந்திருக்கிற கந்தலான ஆடையை கவனித்துவிடக் கூடாதே என்று எண்ணி, தன் வெறுங்காலுடன், பின்பக்கமாக நகர்ந்தாள். அவன் அவளை நோக்கி நடந்து சென்று, “என்னைக் கண்டு பயப்படவேண்டாம்” என்றான். “நான் ஒரு காரியம் கூற விரும்பு கிறேன். நான் இங்கே ஒரு நோக்கத்தோடு தான் வந்தேன். நான் ஒரு மனைவியை கண்டு பிடிக்கவே வந்தேன். எவ்விடங்களிலும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நகரத்தில் வாழும் எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ள விரும்பவில்லை. என் சிந்தையில் இருக்கிறபடி ஒரு உண்மையான மனைவியை அடைய வே நான் விரும்புகிறேன். சிலர் மூலமாக நீ ஒரு உறவினள் என்பதை அறிந்து கொண்டேன்'' என்றான். “அது உண்மைதான், ஐயா” என்றாள் அவள். 37“நான் உன்னை கேட்க விரும்புகிறேன். நீ என்னை விவாகம் செய்து கொள்வாயா?'' என்று கேட்டான். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் மிகவும் இக்கட்டான நிலை மையில் ஆகிவிட்டாள். அம்மனிதனுக்கு என்ன பதில் சொல்வ தென்றே அவளுக்குத் தெரியவில்லை. 38அவள் எவ்வாறு உணர்ந்திருப்பாள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நீங்கள் அவ்வாறு செய்ய வில்லையா? ஒரு காலத்தில் பாவியாயிருந்த நான், ஒன்றுக்கும் இலாயக்கில்லாதவனாக இருந்தபொழுது, ஒரு குடிகாரனின் மகனாக இருக்கையில், இயேசு கிறிஸ்து, “நீ எனக்கு வேண்டும்'' என்றார். என்னைப் போலுள்ள ஒருவனிடம் அவர் எவ்வாறு வர இயலும்? ''உனக்கு பரலோகத்தில் ஒரு வீட்டைத் தருவேன்'' என்று எனக்கு எவ்வாறு கூறமுடியும்? 'நான் உன்னை இரட் சிப்பேன்'' என்று என்னைப்பார்த்து அவர் எவ்வாறு கூற முடியும்? என்னைப் போன்ற நிர்பாக்கியமுள்ளவனுக்கு அது எவ்வாறு சாத்தியமாகும்? ஆனால் அவர் அதைச் செய்தார். அவள், ''ஐயா, நான் பாத்திரமானவள் அல்ல. உம்மைப் போன்ற ஒரு மனிதனுக்கு நான் மனைவியாக ஆவதற்கு என்னால் இயலாது. ஏனெனில் நீர் மேன்மையான காரியங்களுக்கு பழக்கப் பட்டவர். நான் ஏழை, எனக்கு அவைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது'' என்று அவரிடம் கூறினாள். அவனோ , ''ஆனால் நீ என்னுடைய தெரிந்தெடுத்தலாக இருக்கிறாய்'' என்று கூறினான். அதே காரியத்தை இயேசு உங்களுக்கும் கூறியது அருமை யாக இருக்கவில்லையா? நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு உங்களுக்கு தகுதியில்லை என்பதை நீங்களே அறிந்திருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. ஆனால் அவர்.... அவரே உங்களை தெரிந்தெடுத்தார். அது அவருடைய தயவாக இருக்கிறது. அவருடைய இரக்கம்தான் உங்களைத் தெரிந்தெடுத் தது. நீங்கள் அவரை தெரிந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் அறி வீர்கள். அவர் உங்களைத் தெரிந்தெடுத்தார். அது உண்மை . “நான் ஏற்றவளல்ல” என்றாள் அவள், “நீ உன்னுடைய ஆடைகளைப் பார்க்க வேண்டாம். உன்னு டைய ஆடைகளை நான் பார்க்கவில்லை. நீ என்னவாய் இருக்கிறாய் என்பதைத் தான் நான் பார்க்கிறேன்'' என்றான் அவன். ”நீ என்னை மணந்து கொள்வாயா?“ என்று கேட்டான். இறுதியாக அவர்கள் இருவருக்கிடையில் விவாகத்தைப் பற்றிய ஒப்பந்தம் ஏற்பட்டது. ”இந்த நாளிலிருந்து ஒரு வருட காலத்தில் நான் திரும்பி வருவேன். நீ ஆயத்தமாயிருப்பாயாக. கலியாண வஸ்திரத்தோடு ஆயத்தப் பட்ட இரு, நான் இதே இடத்திற்கு திரும்பி வந்து உன்னை இங்கேயே வந்து மணந்து கொள்ளுவேன். நான் உன்னை சிக்காகோ பட்டணத்திற்கு புறநகர் பகுதியில் கொண்டு செல்வேன். அங்கு நீ வசிப்பதற்கென உனக்கு ஒரு அரண்மனை உண்டாயிருக்கும். இந்த எல்லா பாத்திரம் கழுவுதலும். அப்பொழுது முடிந்து போகும்'' என்று கூறினான். 39இப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரிகள் அதைப் பற்றி கேள்விப்பட்ட பொழுது, “எளிய அறியாமையுள்ள முட்டாளே! அம்மனிதன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதை அறியவாயாக'' என்றார்கள். அதேவிதமாகவே அவர்களும் இன்றைக்கு கூறவில்லையா? “ஒரு கூட்டம் உருளும் பரிசுத்தர். தங்கள் பெயரைக்கூட எழுதத் தெரியாத ஒரு கூட்டம் மக்கள். எவ்வாறு சபையாக இருக்க முடியும்? எவ்வாறு அவ்வதமானதொரு குழுவினர் அவ்வாறு இருக்கமுடியும்?'' என்று கூறுகிறார்கள். ஆனால் நான் இயேசு கிறிஸ்துவுக்கு என்று நிச்சயிக்கப்பட்டு, நம் பாவங்களை போக்கத் தக்கதாக நம் இருதயத்தில் இயேசு கிறிஸ்துவின் நிச்சயதார்த்த முத்தத்தை பெற்று விட்டபடியினால், அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஏதோ ஒன்று, அவர் நமக்காகத் திரும்பி வருகிறார் என்பதை நமக்குக்கூறிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளில் அவர் திரும்பி வருவார். 40ஆண்டு முழுவதும் அப்பெண் உழைத்தாள் அடிமையாக. தினக்கூலியாக அவளுக்குக் கொடுக்கப்பட்ட எழுபத்தைந்து செண்ட் நாணயத்தை அவள் சேமித்துக்கொண்டே வந்தாள். அவள் கலியாண உடுப்பை வாங்கியுடுத்திக் கொண்டு ஆயத்தமாக இருப்பதற்காக பணத்தை சேமித்தாள். அவள் தன்னை ஆயத்தம் செய்து கொள்வதிலேயே சிந்தனையாயிருந்தாள். அவள் தன்னை ஆயத்தம் செய்து கொண்டாள். அவள் தன் ஆடைகளை சேர்த்தாள், தன் கலியாண வஸ்திரத்தை. அதைப் பார்த்து அவளுடைய ஒன்று விட்ட சகோதரிகள் ஏளனம் செய்தார்கள், பரிகசித்தார்கள். இறுதியாக, அந்தக் குறிப்பிட்ட நாள் வந்தது. ஓ, அவன் தனது கலியாண ஆடையை உடுத்திக்கொண்டு தன்னை ஆயத்தம் செய்துகொண்டாள். அவள் ஆயத்தமாக இருக்கும்படி தன்னை சுத்தம் பண்ணிக்கொண்டாள். அவளுடைய ஒன்று விட்ட சகோதரிகள் வந்து அவளைச் சுற்றி நின்று கொண்டு , கேலியாக தலைவணங்கி, ''மதியீனமுள்ள சிறுமியே , அம்மனிதன் அந்த அர்த்தத்தில் கூறிவில்லை. உன்னைப்போல் ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ளவே மாட்டான்'' என்று கூறினார்கள். ஆயினும், அவன் தன்னை ஆயத்தம் செய்து கொள்ளத்தான் செய்தாள். 41எனவே, மாலைப்பொழுது கழியும் நேரம் வந்தது, அவர்கள் அவளை பரிகசித்து, ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள். அவளோ, வாசலண்டையில் நின்று காத்துக் கொண்டேயிருந்தாள். எனவே அவள்.... அவர்கள், “அவன் எந்த வேளையில் இங்கே வந்து சேருவதாக் கூறினான்?'' என்று கேட்டார்கள். 'அவர் சொல்லவில்லை'' என்றாள். ஆனால் அவர் என்னை மணந்து கொண்ட இரவில் .... அல்லது என்னோடு விவாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதற்காக மோதிரத்தை அவ்விரலில் அளித்தபோது, 'இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்தில் வருவேன்' என்று கூறினார். எனவே, இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது'' என்று கூறினாள். ஆமென். அவள் காத்துக் கொண்டிருந்தாள். “எனக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. இன்னும் முப்பது நிமிடங்கள் உள்ளன, இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளன'' என்றாள். அவர்களோ சிரித்து, அவளை பரிகசித்தனர், அவளை எல்லாவிதமான பெயர் சொல்லி அழைத்தார்கள். ஆனால் இறுதியாக, சரியாக அந்த முக்கியமான வேளை வந்தது, அவர்கள் இரதத்தின் சக்கரங்கள் கிளப்பிவிடுகிற புழுதி யையும், இரதத்தின் சத்தத்தையும், குதிரைகள் குளம்பொலியை யும் கேட்டனர். அச்சிறிய மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணிக் கொண்டு, வாசலிலிருந்து குதித்து, ரோஜாக்காளால் அலங்கரிக் கப்பட்ட அப்பின்னல் தட்டி வழியாக ஓடி, தான் நேசித்தவனும், தனக்கு கணவனாக ஆகப்போகிறவனும், தன்னை கொண்டு சென்று மணந்து கொள்தவற்காக இரதத்தில் அழைத்துச் செல்லப்போகிற வனுடைய கரங்களில் பறந்தோடி அடைக்கலம் புகுந்து கொண் டாளே, அக்காட்சியையோ பார்ப்பதற்கு எவ்வளவு அருமையாக இருந்தது! 42“உருளும் பரிசுத்தர், பெந்தெகொஸ்தேயினர்'' என் றெல்லாம் பரிகசிக்கிறார்களே... இந்நாட்களில் ஒன்றில் .... நாம் காத்துக்கொண்டு இருக்கிறோம், நமக்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது. 'அதெல்லாம் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை” என்று கூறுகிறார்கள். கவலைப்படவேண்டாம். நமக்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது. அவர் வாக்குரைத்தப்படி அந்த க்ஷணத்தில் அவர் இங்கே இருப்பார். இந்நாட்களில் ஒன்றில் நாம் பறந்து சென்றுவிடுவோம். ஆயத்தமாயிருங்கள். கலியாண வஸ்திரம் தரித்தவர்களாயிருங்கள். எல்லாக் கொடுமையும் உங்கள் இருதயத்தைவிட்டு அகற்றிவிடுங்கள்.... 43இவ்வேதவாக்கியம் எவ்வாறு கூறுகிறது என்பதை கவனியுங்கள். “நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். (புரிந்து கொண்டீர்களா?) சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக் கொள்ளும் படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. (தேவனுக்கு ஸ்தோத்திரம்) பின்னும், அவன் என்னை நோக்கி : ஆட்டுக்குட்டி யானவரின் கலி யாண விருந்துக்கு அழைக்கப்பட்ட வர்கள் பாக்கிய வான்கள் என்றெழுது என்றான். மேலும் இவைகள் தேவனுடைய சத்திமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். வெளி. 19:7-9 எனவே இந்நாட்களில் ஒன்றில், இனிமை நிறைந்த அந்த எதிர்வரும் காலத்தில், ஆகாயத்தில் ஒரு சந்திப்பை உண்டாகப் போகிறது. ஆம் ஆயத்தமாக நிலைத்திருங்கள். உங்களை ஆயத்த மாக்கிக்கொள்ளுங்கள் எல்லா கெட்ட எண்ணங்களையும் உங்கள் இருதயத்தை விட்டு அகற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அது எவ்வளவு இருளாய் தோன்றினாலும், 'நீங்கள் ஒரு தவறு செய்து விட்டீர்கள்'' என்று எத்தனை பேர்கள் உங்களை நகைத்து, கேலி செய்து கூறினாலும், அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். பரிசுத்தமாக ஜீவித்துக், தேவனுக்காக ஜீவித்து, சரியானவற்றை தொடர்ந்து காத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள், அந்த வேளை வந்து சேரும். 44எனவே, அவள் மீண்டும் வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரத்தில் காணப்படுகிறாள் என்பதைப் பாருங்கள். “இவைகளுக்குப் பின்பு...'' (யோவான் சபைக் காலங்களைப் பார்த்தபிறகு) இவைகளுக்கு பின்பு, இதோ பரலோகத்தில் ... ஒரு வாசலைக் கண்டேன். யோவான் இன்னமும் பத்மு தீவில் தான் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சபைக்காலங்களெல்லாம் முடிவடைந்ததை அவன் பார்த்த பிறகு: ''...பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்...“ வெளி.4:1 “ஒரு வாசல்” வாசலானது எது? வெளிப்படுத்தின விசேஷம் 3.8. வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம் 8ம் வசனத்தில் : “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்... இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அதை ஒருவனும் பூட்ட மாட்டான்' என்று கூறப்பட்டுள்ளது. ஒருவனும் அதை திறக்கவும் முடியாது. அவரே வாசலாயிருக்கிறார். வாசல்! கிறிஸ்துவே வாசலாயிருக்கிறார். ''ஆட்டுத் தொழுவத்துக்கு நானே வாசல்'' என்று யோவான் 10 அதிகாரத்தில் கூறியிருக்கிறார். பழைய நாட்டுபுற தேசத்தில் மேய்ப்பனானவன் தன் ஆடுகளை தொழுவத்திற்குள் கொண்டுபோய் விட்டு விட்டு அவைகள் யாவும் உள்ளே வந்துவிட்டனவா என்று அவைகளை எண்ணிப் பார்த்துவிட்டு, வாசலில் அவன் குறுக்காக படுத்துக்கொள்கிறான். அவன் மேல் நடந்து செல்லாமல், ஓநாய் தொழுவத்திற்குள் நுழையவே முடியாது. ஆடுகளும் அவன் மேல் தாண்டிச் செல்லா மல் தொழுவத்தைவிட்டு வெளியேற முடியாது. மேய்ப்பனே ஆட்டுத் தொழுவத்தின் வாசலில் படுத்துக் கொள்வதால், ஆடுகள் தாங்கள் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்பதை எவ்வளவாய் உணரும்! பழைய ஏற்பாட்டில், நோவா பேழையின் வாசலில் நின்றான். ஓ, கவனியுங்கள். நான் ஒரு காரியத்தைக் கூறப் போகி றேன்! அவன் பேழையின் வாசலில் நின்று, தன்னைப் பரிகசித்த மக்களுக்கு மனந்திரும்புதலையும், நீதியையும் குறித்து பிரசங்கித் தான். அவன் நின்றிருந்த அதே வாசலைத் தவிர வேறு எந்த வாசல் வழியாகவும் யாரும் பேழைக்குள் பிரவேசித்திட முடியாது. பேழைக்கு அந்த ஒரு கதவு தவிர வேறு வாசல்கள் இல்லை யல்லவா? 45அங்கே ஒருயொரு வழிதான் உள்ளது. சகோதரன் ஸ்ட்ரிக் கரே, கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பிரவேசிக்க ஒரேயொரு வழிதான் உள்ளது. ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு ஒரேயொரு வாசல்தான் உண்டு, அவ்வாசல் இயேசுவே . ''நானே வாசல்'' என்றார். அவ்வாசலுக்குப் போகும் சாலையாகிய வழி நானே ஆட்டுத் தொழுவத்திற்கு நானே வாசல்'' என்றார். இச்பைக் காலத்திற்கு, “இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்'' என்று கூறினார். மெதோடிஸ்ட் சபைக்காலத்திற்கு அவர் இதைக் கூறினார். ஆனால் அவர்களோ அதினின்று விலகிச் சென்று, ஸ்தாபனத்திற்குள் சென்றுவிட்டனர். ”ஆனால் நான் உனக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக் கிறேன்'' என்கிறார். அவர்கள் தங்கள் காலத்தில் பரிசுத்தமாகுதலைப் பெற்றுக் கொண்டதற்குப் பிறகு, “நான் திறந்த வாசலை உனக்கு முன்பாக வைப்பேன்'' என்றார். திறந்த வாசல் பரிசுத்த ஆவிதான். ”ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும் அந்த ஒரு சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்ட டோம்'' அந்த ஒரு சரீரம் கிறிஸ்துவே . அவர் அச்செய்தியை மெதோடிஸ்ட் சபைக்கு முன்பாக வைத்தார். ஆனால் அவர்களோ அதினின்று விலகிச் சென்று விட்டனர். அவர் பரிசுத்தமாகுதல் வரையிலும் வந்துவிட்டு, பரிசுத்த ஆவியைப் புறக்கணித்தனர். அதை ஞாபகத் தில் வைத்திருக்கிறீர்களா? அந்த ''திறந்த வாசல்'' நாம் எவ்வாறு கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோம்? ஒரே ஆவியினால், பரிசுத்த ஆவியினால் தான், அது கிறிஸ்துவின் ஆவி யாகும். நான் கைகுலுக்கிக்கொள்வதினால் அல்ல, தெளித்தலினால் அல்ல. ஆனால் ஒரே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் உள்ளே பிரவேசித்திருக்கிறோம். பரிசுத்த ஆவியினால் நாம் யாவரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அச்சரீரத்தில் பங்கு கொள்ளுகிறவர்களாக ஆக்கப்பட்டோம். அந்த வாசலில் பிரவேசிக்க ஒரு பரிசுத்த ஆவியின் அபிஷேகம். 46இந்த வாசல் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது, அவன் கர்த்தராகிய இயேசுவைக் கண்டான். அவ்வசனத்தின் தொடர்ந்துள்ள பாகத்தைப்பாருங்கள். அவ்வாசல், கர்த்தராகிய இயேசுவே. '... இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது...'' வெளி.4:1 இப்பொழுது காட்சியானது மாறுகிறது. யோவான் பத்மு தீவில் கவனித்துக்கொண்டிருந்தான். இப்பொழுது மேலே ஏறெடுத்துப் பார்க்கிறான். ஏன்? அவன் பூமியில் இங்கே நடை பெற்று வந்து சில காரியங்களைப் பார்க்கிறான் (இந்த சபைக் காலங்களை), ஏழு சபைக்காலங்கள் நெடுகில் உள்ளவைகளைக் கண்டான், அவன் இவ்வாறு இச்சபைக்காலங்களைப் பார்த்த பிறகு, அதன் பிறகு, சபைக்காலங்கள் முடிவடைந்த பிறகு, ஒரு சத்தத்தைக் கேட்டான். அவன் பரலோகத்தை ஏறெடுத்துப் பார்த்து, அங்கே திறந்த வாசலைக் கண்டான். அவன் முதலில் கேட்ட சத்தமானது எக்காள சத்தம் போல் இருந்தது, நல்லது, இப்பொழுது காட்சியானது பத்மூ தீவிலிருந்து பரலோகத்திற்கு மாறுகிறது. 47ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவிய அதே சத்தம் தான் இந்த சத்தமும். அதே சத்தம்தான். சத்தம் மாறவில்லை. ஆனால் அவன் முதலில் அந்த சத்தத்தை கேட்ட போது அந்த சத்தம் எங்கே யிருந்தது? முதல் சபைக்காலத்தில் நடந்ததை எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? அவன் அவனுக்குப் பின்னாக. '... கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்...'' வெளிப்படுத்தின விசேஷம் 1:10.... “ஆவிக்குள்' வெளிப்படுத்தின விசேஷம் 1:10,13 ஆகிய வசனங்களுக்கு திரும்புங்கள். 'கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன் .... சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைக் போலிருந்தது ... சத்தத்தைப் பார்க்கத் திரும்பின போது ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் ஒருவர் நிற்கிறதைக் கண்டேன்.'' அவர் யோவனுக்கு ஏழு குத்துவிளக்குகளின் இரகசியத் தையும், ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கிறதைப் பற்றியும், அவர் தலையின் மேல் வெள்ளை தலைப்பாகை அணிந் திருப்பதைப் பற்றியும், பாதங்கள் வெண்கலம் போன்று இருப்ப தையும், கண்கள் அக்கினி ஜுவலையாக இருப்பதைப் பற்றியும் மற்றும் இவ்விதமாக அடையாச் சின்னங்கள் பற்றியும் உள்ள இரகசியத்தையும் வெளிப்படுத்திய பிறகு, அதே சத்தத்தை (என்ன?) பரலோகத்திலிருந்தும் பேசக் கேட்டான். அவன் மேலே ஏறெடுத்து, திறக்கப்பட்ட வாசலைப் பார்த்தான். ஓ, பரலோகத் திற்குப் போவதற்கு ஒரு திறந்த வாசல்! அதற்குள் நீங்கள் எவ்வாறு பிரவேசிக்கிறீர்கள்? கிறிஸ்து இயேசுவாகிய அந்த ஒரே வாசல் வழியாக, ஒரே வழியாகத்தான். அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை . 48''வேறு வழியாய் ஏறுகிறவன், கள்ளனும் கொள்ளைக்காரனு மாயிருக்கிறான்''. வேறு வழியாக ஏறி, கலியாண விருந்தில் கலியாண வஸ்திரம் தரியாதவனாய் காணப்பட்டவனைப் பற்றிய உவமையில், அவன் குற்றமுள்ளவனாகக் காணப்பட்டு, அவனைக் கட்டி புறம்பான இருளில் தள்ளிவிட்டார்கள். கலியாண விருந்துக்கு உள்ளே வருவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. சமீபத்தில் தான் நான் இங்கே அதைக் குறித்துப் பிரசங்கித்தேன். ஒரு மனிதன் திருமாணமாகும் பொழுது, முன்காலத்தில் அவனே நேரில் போய் அதற்கான அழைப்பைக் கொடுக்க வேண்டும். அவனே கலியாண வஸ்திரமெல்லாம் வருவபவர்களுக்கு அளிக்க வேண்டுமாம். எனவே விருந்து மேசையில் கலியாண வஸ்திரம் தரித்திராத அந்த மனிதனை மணவாளன் சந்தித்தபொழுது..... இவ் வுண்மையை எத்தனை போர்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்? வேதத்தை படித்த யாவரும் நிச்சயம் அறிவீர்கள். அவன் கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனிதனை, கலியாண விருந்து மேசை யருகே அமர்ந்திருக்கிறதைக் கண்டான். 49அது என்னவாக இருக்கிறது? மணவாளனானவன் வீட்டு வாசலில் தானே வந்து நின்று, அழைப்புப் பெற்றவர்கள் வருகையில் அவர்களை வரவேற்கிறான். “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்'. 'என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும், அல்லது என் பிதா அழைத்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள்'' என்று கூறினார் இங்கே அழைப்புப் பெற்றவர்கள் யாவரும் வருகிறார்கள், தங்கள் அழைப்பைக் கொடுக்கிறார்கள், மணவாளன் உள்ளே வந்து யாவரையும் பார்க்கையில் அவர்கள் யாவரும் ஒரே விதமாகத் தோற்றமளிக் கிறார்கள். பழங்காலத்து பரிசுத்த ஆவியின் மார்க்கத்தைப் பற்றிய ஒரு ஒரு நல்ல காரியம் இது. அது யாவரும் ஒன்று போல் இருக்க ஆக்குகிறது. அவர்கள் ஐசுவரியவான்களாயினும், தரித்திரரா யினும் சரி, அடிமையோ, சுயாதீனனோ, அவர் கறுப்பரோ, அல்லது வெள்ளையரோ, ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் அவர்கள் யாவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாக இருக்கிறார் கள். மணவாளனானவன் வாசலில் நின்று, அழைக்கப்பட்ட வர்களை வரவேற்று, அழைப்புச் சீட்டைப்பெற்றுக்கொண்டு, அங்கியினால் அணிவித்துவிடுகிறான், எனவே பணக்காரனானாலும் சரி, ஏழையானாலும் சரி, யாவரும் ஒரேவிதமாக தோற்ற மளிக்கிறார்கள். தேவனுடைய இராஜ்யத்திலும் அதேவிதமாகத் தான் உள்ளது. அங்கே பெரிய மனிதர்கள் என்றும் சிறிய மனிதர் கள் என்றும் வேறுபாடு இல்லை, யாவரும் ஒரேவிதமான நபர்கள்தான். யாவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறார்கள். 50மணவாளன் திரும்பி வந்து, கலியாண வஸ்திரம் தரித்திரா தவனாய் ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “சிநேகிதனே, இங்கே எப்படி வந்தாய்?'' என்று கேட்டான். அதற்கு அவன் பேசாமலிருந்தான். அம்மனிதன் வாசலைத் தவிர வேறு வழியாக உள்ளே நுழைந்துவிட்டான் என்பதைக் தான் இது காண்பிக்கிறது. அவன் ஒரு ஜன்னல் வழியாகவோ, அல்லது கொல்லைப்புற வாசல் வழியாகவோ தான் உள்ளே நுழைந்து இருக்கவேண்டும். அம் மனிதனை அவன் சிநேகிதன் என்று அழைத்தான்; அம்மனிதன் ஒரு சபை அங்கத்தினன் என்பதைத்தான் இது காண்பிக்கிறது. ”சிநேகி தனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்'' இயேசு தாமே இதைக் கூறினார். “அவன் பணிவிடைக்காரரை நோக்கி: இவனை கையுங்காலும் கட்டி...'' என்றார் அவனை அழுகையும் பற் கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போட்டார்கள். அவை கிறிஸ்துவின் சொந்த வார்த்தைகளாகும், சரிதானே? அவன் தள்ளப்பட்டான் ஏனெனில், அவன் கல்யாண வஸ்திரம் தரித்திராதவனாய் வாசல் வழியாய் வராமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வந்து விட்டான் என்பதை அது நிரூபிக்கிறது. அவன் வாசல் வழியாய் பிரவேசித்திருந்தால், அவன் ஒரு கலியாண வஸ்திரத்தைப் பெற்றுக் கொண்டிருப்பான். 51ஓ , இதைக் கேளுங்கள்! பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கலியாண வஸ்திரமாக இருக்கிறதென்றால், வேறு எந்தவிதமாக நாம் கலியாண விருந்தில் பங்குகொள்வது? முதலாம் சபைக் கால மானது கிறிஸ்து இயேசுவாகிய வாசல் வழியாகப் பிரவேசித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப் பட்டு, கலியாண வஸ்திரம் தரித்துக் கொள்வதற்காக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டு வரவேண்டியது அவர்களுக்கு அவசியமாகக் காணப்பட்டால், நாம் வேறு எந்த வழியாக பிரவேசிக்கப்போகிறோம்? நீங்கள் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே அல்லது வேறு எந்த ஸ்தாபனங்கள் வழியாக வந்தால், நீங்கள் கையுங்காலும் கட்டப்பட்டு புறம்பான இருளில் தள்ளப்படுவீர்கள் ஒரே வழியும், ஒரே வாசலும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் வழியாகத் தான் நீங்கள் வரவேண்டும். ஆமென்! 52அதே சத்தம் தான். வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதி காரம் 10,13 ஆகிய வசனங்கள். அவனிடத்தில் பேசின சத்தமானது எக்காள சத்தம் போல் தெளிவாக இருந்தது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரு எக்காளமானது எத்தகைய சத்தத்தை தொனிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது கூரிய கீச்சிடுகிற தொனியைத் தான் கொடுக்கிறது. வேதத்தில் எக்காளம் என்பது எதைக் குறிக்கிறது? யுத்தத்தைக் குறிக்கிறது. வேதாகம நாட்களில் ஒரு எக்காளம் முழங்குகிறதை நீங்கள் கண்டால், அதன் தொனி யுத்தத்தைக் குறிக்கும் ஒரு வெளிப்படுத்தலாக இருக்க வேண்டும், அல்லது ஏதோ ஒரு காரியம் நடைபெறவிருக்கிறது. 53சபைக்காலங்கள் முடிவடைந்த பிறகு, எல்லாம் ஆயத்தமாக வந்தபிறகு, 4ம் அதிகாரமானது, இங்கே சபைக்காலங்கள் முடி வடைந்த நிலையில், ஆயத்தமாக அமைக்கப்படுகிறது. அவர் பூமியைவிட்டு கிளம்பி விட்டார் என்பதை நீங்கள் பாருங்கள் ஏழு குத்து விளக்குளின் மத்தியில் இருந்து கொண்டு யோவானோடு அவனுக்குப் பின்னாக இருந்து பேசினவரின் சத்தத்தை நினைவில் கொள்ளுங்கள். கிரியையானது முடிவடைந்துவிட்டது. இப் பொழுது அதே சத்தமானது பரலோகத்தில் இருந்து பேசிக்கொண் டிருக்கிறது. அது என்னவாயிருக்கிறது? அவர் தன் ஜனங்களை மீட்டுக் கொண்டுவிட்டார். பூமியில் உள்ள அவரது கிரியையானது முடிவடைந்துவிட்டது. அவர் இப்பொழுது மகிமையில் இருந்து கொண்டிருக்கிறார். அங்கிருந்து யோவானை, ''இங்கே ஏறி வா'' என்று அழைக்கிறார். ஆமென் இப்புத்தாண்டு தின வேளையில், நான் ஆர்ப்பரிக்க வேண்டும்படி உணரத்தக்கதாக அது எனக்குச் செய்கிறது. ஓ, என்னே ! ஆயத்தப்படுங்கள். இங்கே ஏறி வா'' யுத்தம்! இது பெரிய யுத்தம் ஒன்று நிகழவிருப்பதைக் காட்டு கிறது. தேவனுடைய செய்தியை நிராகரித்தவர்கள், பரிசுத்த ஆவியையே நிராகரித்தார்கள், அவரே ஏழு சபைக் காலங்களின் செய்தியாளர். அவரது இக்கிருபையின் செய்தியைப் புறக்கணிக் கிறவர்களுக்கு, நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு எதுவும் ஆயத்த மாய் இருக்கவில்லை; அவர் இப்பொழுது பூமியின் மேல் வாதைகளை ஊற்ற ஆயத்தமாக்கிக்கொண்டு இருக்கையில் “இங்கே ஏறி வா, என்ன சம்பவிக்கப் போகிறதென்பதை நான் உனக்கு காண்பிப்பேன்; கிறிஸ்துவைப் புறக்கணித்த தேவனற்ற பாவிகள் மேல் நான் என்னுடைய கோபாக்கினையை ஊற்றப் போகிறேன்'' என்று அழைக்கிறார். 54காட்சியமைப்பைப் பாருங்கள். இந்த இரவில் நாம் மேலும் ஆராய்கையில், இன்னும் கூடுதலான விஷயங்களை நீங்கள் அறிய வருவீர்கள். இங்கே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு விட முடியாது; ஒவ்வொரு வேத வசனத்தைக் குறிப்பிட்டுக் கொண்டே தான் போக வேண்டும். கடைசி எக்காளம் தொனிக்கை யில், கடைசி யுத்தமானது சண்டையிடப்படும் பொழுது, கடைசி பிரசங்கமானது பிரசங்கிப்படும் பொழுது, கடைசி பிரசங்கமானது பிரசங்கிக்கப்படும்பொழுது, கடைசி பாடலானது பாடப்படுகையில், புறக்கணித்தவர்களுக்கு அது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கப்போகிறது! நாம் கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக நிற்போம். “நீங்கள் ஏன் அதைக் ஏற்றுக்கொள்வில்லை?'' என்று உங்களிடம் கேட்கப்படும். ”நான் உனக்கு கொடுத்த ஜீவனைக் கொண்டு நீ என்ன செய்தாய்?' என்று கேட்கப்படும். சரியான காரணம் ஒன்றை கூறும்படி நீங்கள் கேட்கப்படுவீர்கள். அதன் பிறகு என்ன? நான் அப்பாடலை பாட நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், அல்லது பாட முயன்றதை. அவ்வேளையில் என்ன? அவ்வேளையில் என்ன? மகத்தான அப்புத்தகம் திறக்கப்படுகையில் அப்பொழுது என்ன ? செய்தியைப் புறக்கணித்தவர் யாவரும் காரணம் கூறும்படி கேட்கப்படுவீர்களே, அப்பொழுது, என்ன ? இப்புத்தகம் எழுதப்பட்டது எவ்வளவு நிச்சயமோ, அந்த அளவுக்கு அங்கே நிற்கப்போவதும் நிச்சயமாமே. நீங்கள் அங்கே நிற்கப்போகிறீர்கள். அப்பொழுது காரணம் கூறும்படி கேட்கப்படு வீர்கள் என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய குமாரர்கள், குமாரத்திகள் என்ற முறையில் நாம் நம்மையே அன்றாடம் ஒவ்வொரு மணி நேரத்திலும் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாய் இருக்கிறது. “நான் அனுதினமும் சாகிறேன்'' ''ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்'' பாருங்கள்? உங்களை சோதித்துப் பாருங்கள்? ஏனெனில் பதிலளிக்க நீங்கள் எப்பொழுது எந்த வேளையில் உன்னதத்திற்கு அழைக்கப்படுவீர்கள் என்பதை அறியமாட்டீர்கள். 55இப்பொழுது “எக்காள சத்தத்தைக் கேட்டேன்' என்பதைப் பற்றி முதலாம் வசனத்தின் கடைசி பாகத்தில் யோவான் என்ன கூறினான் என்பதை குறித்துக்கொள்ளுங்கள். “.. முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா...'' வெளி. 4:1 ''நான் உனக்கு பூமியில் உள்ள சபைக் காலங்களைக் குறித்து காண்பித்தேன்; இப்பொழுது இங்கே ஏறி வா, இங்கே நடக்கிறவைகளை உனக்குக் காண்பிக்க விரும்பு கிறேன்.'' பாருங்கள், அப்படியானால் கிறிஸ்து பூமியை விட்டு புறப் பட்டுவிட்டார். அவர் மகிமைக்குள் சென்றுவிட்டார். சபைக் காலமானது முடிவடைந்துவிட்டதையும், அவரது ஆவியின் கிரியை இங்கே முடிவடைந்து விட்டது என்பதையும் காண்பிக்கிறது. அவர் மகிமைக்குள் போய்விட்டார், அங்கிருந்து கொண்டு யோவானை மேலே ஏறிவரும்படி அழைக்கிறார். வேறென்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அவனுக்கு காண்பித்தார். அதற்காக அவனை “இங்கே ஏறிவா' என்று அழைத்தார். 562ம் வசனத்தை கவனியுங்கள். யோவான் மேலும் இவ்வாறு கூறினான்: “உடனே...” (ஆமென்!) நான் வினோதமாக நடந்துகொண்டால், நான் மிகவும் நல்ல படியாக உணருகிறேன். யோவான் மேலும் கூறினான். .... உடனே ஆவிக்குள்ளானேன்...“ வெளி.4:2 தேவனுடைய சத்தம் உங்களோடு பேச நீங்கள் கேட்கையில் ஏதோ ஒன்று சம்பவிக்கிறது. ஆமென்! அவ்வாறு உங்களுக்கு சம்பவித்ததுண்டா? முப்பதொன்று ஆண்டுகளுக்கு முன்பாக எனக்கு அவ்வாறு சம்பவித்தது. அதன்பிறகு நான் முன்பு போல் இருக்கவில்லை. “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்” என்று அவர் கூறினார். அது என்னை மாற்றினது. 57யோவான் கூறினான்: “உடனே ஆவிக்குள்ளானேன் (என்ன ஆவிக்குள்? பரிசுத்த ஆவிக்குள் ஓ!) ஆவிக்குள்ளானேன்.... இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்.'' வெளி.4:2 இப்பொழுது யோவான் பூமியைவிட்டு புறப்பட்டு விட்டான். கிறிஸ்து பூமியை விட்டு கிளம்பிவிட்டு (பரிசுத்த ஆவி யின் ரூபத்தில்) மீண்டும் சரீரத்திற்குள்ளாக திரும்பிவிட்டார். இன்றைக்கு சரீரமானது ஒரு நினைவுகூருதலாக அங்கே இருந்து கொண்டு இருக்கிறது. ஒரு பலியாக இருந்து கொண்டிருக்கிறது. இவ்வதிகாரத்தினூடே நாம் அவ்விஷயத்தைப் பார்க்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் ஆவியானது சபைக்குள் வாசம்பண்ணும்படி திரும்பி வந்திருக்கிறது. நமக்குள் வாசம் பண்ணும்படியாக. 58இப்பொழுது, இங்கே பூமியில் அவரது கிரியையின் காலத்தின் முடிவைக் குறித்து காண்பித்த பிறகு, அவர் பரலோகத் திற்குள் சென்றார். “இவைகளுக்குப் பின்பு சம்பவிக்கப் போகிற வைகளை நான் உனக்குக் காண்பிப்பேன். சபைக்காலங்களுக்குப் பிறகு உள்ளவைகளை காண்பிப்பேன்' என்று யோவானிடம் கூறினார். ''யோவனே, நான் இனிமேல் கீழே பூமியில் இருந்து எதையும் உன்னோடு பேச முடியாது; ஏனெனில் நான் அதைவிட்டு நீங்கி வந்துவிட்டேன். நான் உன்னதத்திற்கு வந்துவிட்டேன். எனவே நீ மேலே என்னோடு வந்துவிடு' என்று கூறினார். ஆமென்! ”இதற்குப் பிறகு சம்பவிக்கப்போகிறவைகளை நான் உனக்கு காண்பிப்பேன்'' என்றார். ஓ, என்னே! ஓ! தரிசனத்தில் மகிமைக் குள் எடுத்துக்கொள்ளப்பட்டான். அவனுடைய அனுபவம் பவுலுடைய அனுபவம் போன்ற தாகத்தான் இருக்கவேண்டும். 2கொரிந்தியர் 12:2-4 குறித்துக் கொள்ள விரும்பினால் அதைக் குறித்துக்கொள்ளுங்கள். 2 கொரிந் தியர் 12:2-4. பவுலும்கூட ஒரு நாளிலே தரிசனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டான். அதை நீங்கள் அறிந்தீர்களா? அவன் பார்த்த காரியங்கள், அவைகளைப் பற்றி வெளியே பேசுவதற்கு உகந்ததல்ல என்பதாய் இருந்தது. பதினான்கு வருடங்கள் அவன் அதைப்பற்றி குறிப்பிடவேயில்லை. ஆனால் அவ்விரு அனுபவங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் கவனிக்கவும். பவுல் எதைக் கண்டானோ அதைப்பற்றி வெளிப்படையாக பேசவோ அல்லது அதைக்குறித்து சொல்லவோ தடை செய்யப் பட்டான். ஓ, என்னே! அவன் அதை வெளியே சொல்ல முடியும் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. ஒரு சிறு பயணமான நான் ஒரு நாள் இவ்வாறு சென்றிருந்தேன். அதைப்பற்றி நான் குறிப் பிட்ட தேயில்லை. இனி ஒரு போதும் கூறவுமாட்டேன். அவன் வெளியே பேச இயலாதபடிக்கு உள்ள காரியங்களை அவன் பார்த் தான். அவன் மூன்றாம் வானம் வரைக்கிலும் எடுத்துக் கொள்ளப் பட்ட போதிலும், அதைப்பற்றி விவரிக்க வார்த்தைகளே அவனுக்கு இருக்கவில்லை என்று நான் கருதுகிறேன். மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டான், பாருங்கள். 59யோவன் எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது அது எத்தகைய தொரு வேறுபாடானதாக இருந்தது! அவன் அப்பொழுது இயேசுவைக் கண்டான். அவர் அவனிடம், “நீ கண்டவைகளை ஒரு புஸ்தகத்தில் எழுதி, சபைகளுக்கு அனுப்பு'' என்று கூறினார். பவுல் கண்டவைகளைப் பேச தடை செய்யப்பட்டான். ஆனால் யோவானோ, ஒரு புஸ்தகத்தில் அதை எழுதி, அது காலங்கள் நெடுகிலும் போகும்படியாக அவனுக்குக் கூறப்பட்டது. ஓ, என்னே! அது இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது இந்தக் கடைசி நாட்களில் தான் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று இருக்கிறது. யோவானின் நாளில் அது வெளிப்படுத்தப் படவில்லை. நாம் போய்க் கொண்டிருக்கையில், இப்பொழுது அது வெளிப்படுத்தப்படுகிறது. 60ஓ கவனியுங்கள், சபைக்காலம் முடிவடைந்த உடனேயே, யோவான் எடுத்துக்கொள்ளப்பட்டதானது, லவோதிக்கேயா சபைக்காலம் முடிவடைந்த உடனேயே எடுத்துக்கொள்ளப்பட்ட சபைக்கு முன்னடையாளமாக இருக்கிறது. இந்த சபைக் காலத் திற்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது. யோவான் மேலே போனது போல, சபையும் தேவனுடைய சமுகத்திற்கு மேலே போகிறது. அதை நினைக்கையில் அது என் ஆத்துமாவை எழுச்சியூட்டச் கூடியதாக இருக்கிறது. சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வெளிப் படுத்தின விசேஷப் புத்தகத்தில் இந்த இடம் பாருங்கள், சபைக் காலத்திற்கு முடிவிலே எழுதப்பட்டிருக்கிறது. 61இங்கே என்னிடம் இப்பொழுது நான் தெளிவுப்படுத்த விரும்புவதான ஒரு விஷயம் இருக்கிறது; அதுதானே நீண்ட காலமாக அநேக கிறிஸ்தவர்கள் நடுவில் தீர்க்கப்படாத, முடிவு கண்டடையாத விஷயமாக இருக்கிறது. நான் இன்றைக்கு வேத வாக்கியங்களை படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கையில் பல்வேறு பெயர்களையும், வெவ்வேறு நிறங்களையும் வான வில்லையும், அடையாளச் சின்னங்களையும் குறித்துப்பார்த்தேன். அவைகளைப் பற்றி சற்று நேரம் கழித்து நாம் பார்க்கலாம். நான் இன்று சிந்தித்தேன்... நான் இவ் வேதவாக்கியங்களை குறிப் பெடுத்துக்கொண்டிருந்தேன். அதினால் நான் அவைகளை திரும்பிப் பார்க்கவும், அவைகளை குறிப்பிடவும் சாத்தியமாகுமே என்ப தினால் அப்படிச்செய்தேன், ஏனெனில், வழக்கமாக, நான் ஒன்றைக்குறித்து இதைப்போல் பிரசங்கிக்கப்போகிறதென்றால், அது வித்தியாசமானதாக இருக்கும், அதை நான் எழுதி வைத் திருக்கிறதைப் பாராமல் பேச அறிவேன். ஆனால் இந்த முறை யிலே, உங்களுக்கு சிறிது நேரமே இருக்கையில், இவ்விஷயம் வேத வாக்கியங்களில் முன்னும் பின்னுமாக நெடுக சம்மந்த முள்ளதாக இருக்கிறபடியால், நான் அவைகளை குறிப்பிட விரும்புகிறேன். 62மத்தேயு 16:13ல் இதை நாம் காண்கிறோம். விரும்பினால், இதைக் குறித்துக்கொள்ளலாம். மத்தேயு .... வாசிக்க நீங்கள் விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை எடுத்துக்கொள்ள விரும்பினால்..... நல்லது, மத்தேயு 16:13 நாம் அவ்வசனத்தை எடுத்துக்கொண்டு படிப்போம், அப்பொழுது நாம் அதை நிச்சயமாக அறியலாம். மத்தேயு 16ம் அதிகாரம், 13ம் வசனம். மத்தேயு 16:13 வாசிக்கையில் நாம் மிகவும் கவனமாக கேட்போம். பேதுரு வந்தபொழுது... ''பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகி றார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் : சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர் 'நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.“ சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வ தில்லை . பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்தில் கட்டப் பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்ட விழக்கப்பட்டிருக்கும் என்றார். அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். மத் 16:13-20. 63இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். அது முதல்... அந்த வேளை முதற்கொண்டு அவர்... தொடங்கினார். இன்னொரு வசனத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு வாசிக்க விரும்பு கிறேன். 28ம் வசனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மீதியுள்ள வசனங்களை நீங்கள் வீட்டில் போய் வாசித்துக் கொள்ளலாம். “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார். மத்.16:28 ஓ, அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள் “இங்கே நிற்கிற வர்களில் சிலர், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை.'' என்னே ஒரு அறிக்கை இது! குறை கூறுவரோர் அதை எடுத்துக்கொண்டு, தான் எவ்வளவு ஊமையாயிருக்கிறார் என்பதை காண்பிக்கிறார். எப்படி அதைப் பிடித்துக் கொள்ள விரும்புகிறார்! அது நிறைவேறியிருக்கிறது, ஆயினும் அவர்கள் அதைப் பற்றி அறியவில்லை. 64பேதுருவின் கன்மலை பற்றிய அறிக்கைக்குப் பிறகு.... அவனுடைய அறிக்கையானது எப்படிப்பட்டது என்று நாம் அறிவோம். இதே பாறையின் மேல் தான் அவர் தன் சபையைக் கட்டுவார். சிறிய கல்லாகிய பேதுருவின் மேல் அல்ல. ரோமன் கத்தோலிக்கர் அவ்வாறு கூற முயலுகின்றனர். பேதுருவின் வெளிப்படுத்தலைப் பற்றிய அறிக்கையிருக்கிறதே, அதுதான் சபையாகும். தேவன் அதை வெளிப்படுத்துவார். இந்த மனிதனைப் பற்றிய அறிக்கையல்ல, ஏனெனில் அவன் பிறகு பின்மாற்ற மடைந்தான். அவர் தேவனுடைய குமாரன் என்பதைப் பற்றிய பேதுருவின் அறிக்கையல்ல அது. ஏனெனில், அவர் தேவனுடைய குமாரன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். பேதுரு அப் பொழுதுதான் அதைக் கூறினான். ஆனால் அது என்னவாயிருக் கிறது என்றால், அவர் தேவனுடைய குமாரன் என்னும் வெளிப் படுத்தலானது பரலோகத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. ''மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு போதிக்கவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத் தினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். இந்தக் கல்லைப் பற்றிய அறிக்கையின் மேல். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 65நமக்கு நேரம் விரைவாக கடந்துவிடவில்லை என்று நினைக்கி றேன். அப்படியாயின், நாம் இதற்குள் இன்னும் பார்க்கலாம். மானிடருக்குள் இது எவ்வாறு செல்கிறது என்பதை பார்க்க நாம் விரும்புகிறோம். நாம் அதற்குள் செல்வோமென்றால், அது ஒரு அழகான சித்திரமாகக் காணப்படும். நல்லது, இந்த கன்மலையைப் பற்றிய அறிக்கை - அவர் தன்னுடைய சபையை பேதுருவின் அறிக்கையின் பேரில் கட்டுவார். “இங்கே நிற்கிறவர்களில் சிலர், தேவகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை'' என்றார். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவர் ''சிலர்'' என்று கூறினார். சிலர் என்றால் ஒரு நபருக்கும் மேல் என்று அர்த்தம் அல்லவா? “சிலர்'' என்றால் ”ஒருவருக்கு மேல் அதிகமான'' என்பதாகும். ஆனால், இப்பொழுது கவனியுங்கள்: அவருடைய சீஷர்கள் யாவரும் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் கேட்டார். “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர் கள்?'' என்று. ஆனால் அவர் கூறினார்: ”இங்கே நிற்கிறவர்களில் சிலர், மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை.'' என்னே அறிக்கை யிது! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அது கூறப்பட்டது அம், அப்படித்தான். 66தேவனுடைய வார்த்தையானது பிழையின்றி இருக்கிறதா? அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நிச்சயமாக நிறைவேறும். இப்பொழுது நாம் மத்தேயு 17ம் அதிகாரத்திற்கு திருப்ப விரும்பினால்..... இங்கே அடுத்த காட்சி. சில நாட்கள் கழித்து, அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை தனித்திருக்கும் படி உயர்ந்த மலையின் மேல் கூட்டிக் கொண்டு போனார், அவர்கள் சாட்சிகளாயிருக்கும்படி. பேதுரு யாக்கோபு, யோவான் ஆகியோர் தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வருகிறதைப் பார்த்தார் கள். தேவனுடைய இராஜ்யம் வருவதின் ஒத்திகையைப் பார்த்தார் கள். ஆமென்! ஓ, தேவனுடைய இராஜ்யமானது வருகிறதின் ஒத்திகையை காண்பதற்கு அது அவர்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டது. அவர்கள் ஒத்திகையைக் கண்டார்கள். 67சில காலத்திற்கு முன்பு, சில ஊழியக்காரர்களை ஓரல் ராபர்ட்ஸு அதில் ஒருவர்... சிசில் பி.டி மில் பத்து கட்டளைகள் என்ற படத்தை தயாரித்தபொழுது, அவர் சகோதரன் ஷ்க்கேரி யனையும், சகோதரன் ராபர்ட்ஸையும், மற்றும் தேசத்தில் எங்கிலும் உள்ள பிரசங்கியார்களையும், இன்னும் வரவிரும்பும் எந்தப் பிரசங்கிகளையும், இன்னும் வரவிரும்பும் எந்தப் பிரசங்கியையும், திரைப்பட எடுப்பு அரங்குக்கு வந்து, அப்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படும் முன்னர், முன்கூட்டியே அதைப் பார்த்திட அழைத்தார். பொதுமக்களுக்கு திரையிடப்படும் பொழுது, ஒரு டிக்கெட்டுக்கு இருபத்தைந்து டாலர்கள் கட்டணம் வசூலித் தார்கள், அதற்கு முன்பாகவே இவர்களுக்கு முன் காணலாக திரையிடப்பட்டுக் காண்பிக்கப்பட்டது. 'அதன் ஒத்திகையை பாருங்கள்'' என்றார் அவர். ஏனெனில், ஏதாவது விமர்சிப்பதற் குரிய காரியங்கள் இருந்தால் அதைப் பற்றிய கருத்தை அவர்கள் முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவும், அல்லது அதைப்பற்றி என்ன கூறுவார்கள் என்பதைப் பற்றி அறியவும் அவர் விரும் பினார். பொது மக்கள் பார்க்கும் முன்னர் இவர்கள் அதை முன் கூட்டியே கண்டனர். 68இயேசு கூறினார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் (ஆமென்!) தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வருவதைக் காணுமுன், அல்லது மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணு முன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை'' என்று ''மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன்'' என்பதை பாருங்கள். அதற்கு சில நாட்களுக்குப் பின்னர் அவர் பேதுரு, யாக்கோபு , யோவான் ஆகியோரை கூட்டிக் கொண்டு ஒரு உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் அணிந் திருந்த வஸ்திரமானது மிகவும் பிரகாசித்தது, சூரியன் கூட அவ் வளவாய் பிரகாசிக்கவில்லை. ஒரு உவமையை நாம் எடுத்துக் கொண்டால், அதை வேதாகமம் முழுவதும் தொடர்ந்து பார்க்க முடியும் என்பதை எத்தனை தடவைகள் நாம் கண்டிருக்கிறோம்! 69ஒரு குறிப்பிட்ட வேத வாக்கியத்தை நாம் எடுத்துக் கொண்டால், அதை வேதம் முழுவதோடு கட்டி இணைக்கலாம். ஆம் ஐயா. எங்கும் ஒரு கசிவு கூட இல்லை. அவையாவும் தேவனுடைய வல்லமையால் நிறைக்கப்பட்டதாக இருக்கின்றன. பிசாசானவனால் அவன் விரும்பினாலுங்கூட வேத வசனத்தினுள் எதையாவது அழுத்தி உள்ளே நுழைத்திவிட முடியாது. அப் படித்தான் அது இருக்கிறது. பரிசுத்தவான்கள் தங்கள் சாட்சியை உறுதிப்படுதியிருக்கிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் அவர்கள் விசுவாசங்கொண்டு, ஒவ்வொரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொண்டு அதை பரிசுத்த ஆவியின் வல்லமையால் பூசி, இரத்தத் தில் அதைக் கழுவி வைத்திருக்கிறார்கள்; அம் மக்களுக்குள் பிசாசா னவன் நுழைந்து விட முடியாது. அதற்குள் உலகம் நுழைந்து விட முடியாது. பிசாசானவனால் அதற்குள் நுழைந்துவிட முடியாது. அவர்கள் மரித்து, அவர்களது ஜீவனானது தேவனுடைய முத்திரை மூலமாக பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவினுள் மறைந்திருக்கிற தாக இருக்கிறது. அப்படியிருக்க, பிசாசு அவர்களை எவ்வாறு தொல்லைப்படுத்த முடியும்? அவர்கள் அவ்வாறான நிலையில் இப்பொழுது இருக்கிறார்கள். 70இந்த இடத்தில், அப்பொழுது, அவன் வருகையைக் கண்டான், அல்லது அதன் ஒத்திகையைக் கண்டான். அவன் முதலில் எதைக் கண்டான்? வருகையில் முதலாவதாக அவன் கண்டது மோசேயாகும், மரித்த பரிசுத்தவான்களுக்கு எடுத்துக் காட்டாக அவன் இருக்கிறான். அங்கே எலியாவும் நின்று கொண்டிருக்கிறான். ஓ, என்ன நடக்கவிருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். முதலில் அங்கே மோசே இருக்கிறான்; அது தான் இந்த ஆறு காலங்களிலும் நித்திரை செய்த வர்களைக் குறிக்கும் ஆறு சபைக்காலங்கள். அது மாத்திரமல்ல, அங்கே எலியாவும் இருக்கிறான்; கடைசி நாளின் செய்தியாளன் - தூதன் தன்னுடைய குழுவினரோடு நிற்கிறான், அவர்கள் தான் எடுத்துக்கொள்ளப்படபோகும், மருரூபமாகும் குழுவினர். ஆமென்! எதிர்வரும் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிற வர்கள் அவர்கள். அவரோடு எல்லோரும் அம்மலையின் மேல் கூடி வரவில்லை. ஓ, என்னே ! அது என்னவாயிருந்தது? பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு அவர் அளித்த வாக்குத்தத்தம் நிறை வேற்றப்பட்டது. ஏனெனில் அவர், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை'' என்று கூறியிருந்தார். அவர்கள் அதனுடைய முன்காட்சியை - ஒத்திகையைக் கண்டார்கள். இதற்குப் பிறகு, உயிர்த்தெழுதலுக்குப் பிறகு... 71இன்னொரு காரியத்தையும் நான் உங்களுக்கு முன்பாக கொண்டு வர விரும்புகிறேன். இயேசு மரித்து அடக்கம் பண்ணப் பட்ட பிறகு - யோவான் 21:20. தவறாக அர்த்தம் கொண்டோர், இவ்வுபதேசத்தை அந்நாட்களில் ஆரம்பித்தார்கள் நாம் மற்ற விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதைக் குறித்த விஷயத்தையும் நாம் தெளிவுபடுத்தி விடுவோம். யோவான். 20:21-ல் இயேசு தன் சீஷர்களை சந்தித்தார். அவர்களுக்கு நெருப் புத்தழலில் சுடப்பட்ட மீனையும் அப்பத்தையும் கொண்டு உணவளிக்கிறார்; அவர்கள் கரைக்குச் செல்லுகையில், யோவான் அவரது மார்பில் சாய்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது “இவனுக்கு என்ன சம்பவிக்கும்?'' என்று பேதுரு கேட்கிறான். இயேசு யோவானை நேசித்தார். யோவான் மிகவும் அன்புள்ள ஒரு மனிதன். ”இவனைப் பற்றி என்ன? அவனுடைய நிலைமை என்ன வாகும்? அவனது எதிர் காலம் என்ன?'' என்று கேட்டான். இயேசு அவர்களிடம், “நான் வருமளவும் இவனிருக்க எனக் குச் சித்தமானால், உனக்கென்ன?'' என்று கேட்டார். சீஷர்கள் ஒரு தவறைச் செய்தார்கள். அவர் வருமளவும் அவன் உயிரோடு வாழப்போகிறான் என்று இயேசு கூறினதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் இயேசு எந்தத் தவறையும் செய்யவில்லை. வெளிப் படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தில் கிறிஸ்து தமது வார்த்தை யைக் காத்துக்கொண்டார். அவர் யோவானை பரலோகத்திற்குச் கொண்டு வந்து, அவனுக்கு அனைத்தையும் முன் காணலாக காண் பித்தார். மகிமை! அவன்; தானே வரப் போகிற காட்சிகளின் முன் காட்சியைக் கண்டான். அவன் தானே முழு சபைக்காலங்கள் நெடுகிலும் பூமியில் ஜீவிக்கிறவன் போல் இருந்து, அவை சம்ப விக்கிறதையெல்லாம், கர்த்தருடைய வருகையையும், வெளிப் படுத்தின விசேஷ புஸ்தகம் முழுவதின் சம்பவங்களையும் முன் கூட்டியே பார்த்தான். 72அவருடைய வாக்குத்தத்தம் எவ்வளவு பிழையற்றதாய் இருக்கிறது என்பதைப் பாருங்கள். யோவானைத் தவிர, யாக் கோபோ, ஏன் பவுலுங்கூட, இன்னும் மீதியுள்ளவர்கள் எவரும் அவைகளைக் காணவும், கூறவும் அனுமதிக்கப்படவில்லை. “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?'' என்று அவர் கேட்டார். அவர்கள் அதைச் சொன்னபடியினால், அவர் யோவானைத் தெரிந்துகொண்டு, அவனை உயரே எடுத்து, அவன் மரிப்பதற்கு முன்னதாக, எதிர்காலத்தில் சம்பவிக்கப் போகிறவைகளை அவனுக்கு காண்பித்தார். எதோ அக்காலங்களில் அவன் வாழ்ந்தது போல் அவைகளைக் கண்டான். அது என்னவாயிருக்கும் என்பதை அவனுக்குக் காண்பித்தார். சகோதரன் பேட் அவர்களே, அது அற்புதமானதாக இல்லையா? ஓ, பாருங்கள் அவனை உயரே தூக்கி யெடுத்தார். வெளி.. 4:2 அதை நிரூபிக்கிறது. அவனுக்கு நடந்த வைகளையும், நடப்பவைகளையும், நடக்கவிருப்பவைகளையும் காண்பித்தார். அவர் அவனுக்கு சபைக்காலங்களையும், யூதர் களுடைய வருகையையும், வாதைகள் ஊற்றுதலையும், எடுத்துக் கொள்ளப்படுதலையும், மீண்டும் உள்ள வருகையையும், ஆயிர வருட அரசாட்சியையும், அவரது இரட்சிக்கப்பட்டவர்களின் நித்திய வீட்டையும் காண்பித்தார். அவைகள் சம்பவிக்கிற காலத்தில் அவன் வாழ்ந்தது போல் இருந்தது அவைகள் சம்பவிக்க கண்டான். அவனை உயர தூக்கியெடுத்து, அவர் எடுத்திருக்கிற படக்காட்சியை அவனுக்கு முன் கூட்டியே முன் காணலாக - ஒத்திகையை காண்பித்தார். ஓ, என்னே! 73வெளிப்படுத்தின விசேஷம்4:2 அவன் எடுத்துக் கொள்ளப் பட்டான். அதில் அவரது வாக்குத்தத்தம் நிறைவேறியது. யோவான் தனது மரணத்திற்கு முன்பாகவே, மேலே எடுத்துக் கொள்ளப்பட்டு, இனி சம்பவிக்கப்போகிறவைகளை, அவைகள் நிகழப்போகும் காலத்தில் அவனும் உயிரோடிருந்து ஜீவித்துக் கண்டது போல் அவைகள் நிகழக் கண்டான். இவ்விதமாக யோவான் என்ன நடக்கவிருக் குமோ, பூமியில் அக்கால முதல் கர்த்தராகிய இயேசுவின் வருகை பரியந்தம் அப்படியே என்ன நடந்ததோ, நடக்கவிருக்குமோ அவைகளை ஒரு தரிசனத்தில் கண்டான். ஒரு தரிசனத்தில் அதை அவனுக்குக் காண்பித்தார். எனவே, பிறகு அவருடைய சீஷர்களோ, வேறு எவருமோ, அவர் அக்காலத்தில் வருவார் என்று கூறவில்லை. ''நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?'' என்று கேட்டார். பிறகு அவனை அவர் மேலே எடுத்துக் கொண்டு, சம்பவிக்கப் போகிறவைகளை முன்கூட்டியே ஒத்திகையாக நிகழ்த்திக் காண்பித்தார். ஓ, நான் அதை நேசிக்கிறேன். ஓ, என்னே! இப்பொழுது இது என்ன என்பதை நாம் பார்க்கலாம். ''உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்திலே ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்..'' வெளி.4:2 74ஒரு 'சத்தம்' அவனை அழைத்தது. ஓ, அந்தச் சத்தம் அவனுக்குப் பின்னாக இருந்த அந்த சத்தம்- அதை விட்டு என்னால் அகலவே முடியாது. அவன் நோக்கிப் பார்த்தான், அவனுக்கு சபைக்காலங்கள் யாவையும் காண்பித்தார். அவன் ஏழு பொன் குத்து விளக்குகளாகிய சபைக்காலங்களில் நின்று கொண்டிருந் தான், பிறகு அவன், சபைக்காலங்கள் முடிந்த பிறகு, அந்த சத்தத்தைக் கேட்டான். அந்த சத்தம் பூமியைவிட்டு மேலே ஏறிப் போய்விட்டது. அவர் மகிமைக்குள் பிரவேசித்த பிறகு, இங்கே ஏறிவா'' என்று அங்கிருந்து அவர் அவனைக் கூப்பிட்டதைக் கேட்டான். 'இவைகளுக்குப் பின்பு பின்பு சம்பவிக்க வேண்டி யவைகளை உனக்குக் காண்பிப்பேன்'' என்று கூறினார். 75அந்த சத்தம் இன்றிரவு நாம் அந்த சத்தத்தைப் பற்றி பேசுவோமாக. சில வேதவாக்கியங்களை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். நாம் 1 தெசலோனிக்கேயர் 4ம் அதிகாரத்திற்கு போவோம். இந்த சத்தம் என்ன கூறப்போகிறது என்பதை கவனிப் போம். அதை படிக்கும் முன்னரே அது என்ன கூறப்போகிறது என்பதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம் அல்லவா? என்ன சம்பவிக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம். “தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர் கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.'' அப்படித்தானே? 1 தெசலோனிக்கேயர் 4:16-17 ஆகிய வசனங்களைப் படிப்போம். ”அந்த சத்தம், அந்த சத்தம் கிறிஸ்துவின் சத்தம் ஆகும். அது சரிதானே. அது கிறிஸ்துவின் சத்தம். '...தேவ எக்காளத்தோடும்.... (தொனிக்கும்) அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக,... அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.“ தெச. 4:16-17 யோவானை மேலே ஏறிவரும்படி அழைத்த அதே சத்தம் தான், ஒரு நாளில் சபையையும் அழைத்திடும். ஆமென். சபையை அழைத்திடும். 76மேலே ஏறிவரும்படி யோவானை அழைத்த அதே சத்தம் தான் பரிசுத்த லாசருவையும் கல்லறையைவிட்டு எழுந்து வரும்படி அழைத்தது. அது தான் பிரதான தூதனுடைய சத்தமாம். கிறிஸ்துவே பிரதான தூதனுடைய சத்தம் ஆவார். 'பிரதான தூதனுடைய சத்தம்“ பாருங்கள். ஓ, கிறிஸ்துவின் எக்காள சத்தம் யோவானை மேலே ஏறிவரும்படி அழைத்தது. அதே சத்தம்தான் லாசருவையும் அழைத்தது. லாசருவின் கல்லறையில் கவனித் தீர்களா? அவர் உரத்த சத்தத்தோடு பேசினார். ”லாசருவே.. வெளியே... வா'' என்று மெதுவாக பேசவில்லை. அவர் ''லாசருவே, வெளியே வா'' என்று அதிகாரத்தோடு சத்தமிட்டு அழைத்தார். மரித்தோரிலிருந்து எழுந்து வரும்படி அவனை ஆணையிட்டு அழைத்தது அந்த சத்தம். “நான் இங்கே இருக்கிறேன்'' என்று அவன் பதிலுரைத் தான். அவன் செத்து, அவன் சரீரம் நாறிப்போன பிறகு, மரித்தோரி லிருந்து எழுந்து வந்தான். 77அதே சத்தம் தான் யோவானிடம், “இங்கே ஏறிவா'' என்று அழைத்தது. ”இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவை களை உனக்குக் காண்பிப்பேன்'' என்று விளம்பினது. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழும்பும் பொழுது, அதற்காக, அதே சத்தம்தான் தொனிக்கப்போகிறது. 'ஏனெனில் எக்காளம்....' எக்காளம்! எக்காளம் எதைக் குறிக்கிறது? அது கிறிஸ்துவின் சத்தமாகும். அவர் திரும்பி அவனை மேலே ஏறி வரும்படி உத்தரவிட்டு அழைத்தார். அவன் அந்த சத்தத்தை எக்காளம் போல் தொனிக்கக் கேட்டான். “இங்கே ஏறிவா'' என்றார். உயிர்த்தெழுதல் எவ்வாறு இருக்கும் என்பதைப் பாருங்கள். அது ஒரு க்ஷணத்தில், ஒரு இமைப்பொழுதில் நடக் கும். தெளிவாகத் தொனிக்கும் அந்த சத்தமானது, அவர் தாமே சபையை வரும்படி அழைத்திடுவார். ஏனெனில் அவர் அதை விட்டு வெளியே வந்துவிட்டார். அந்த மகத்தான ஆணையிட்டு அழைக்கும் சத்தம்! தேவனே, நான் அந்நாளில் அந்த சத்தத்தைக் கேட்டிட எனக்கு உதவி செய்திடும். 78நான் அடிக்கடி கூறுகிறபடி... சாவுக்கேதுவானவன் என்ற முறையில் நான் அறிவேன்.. ராட்னி அவர்களே... எனக்கு முன்பாக ஒரு பெரிய இருளான வாசலானது வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவேன். அது மரணம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தடவை என் இருதயம் துடிக்கும் போதும் அவ்வாசலுக்கு ஒரு இதயத்துடிப்பு சமீபமாக செல்கிறேன். இந்நாட்களில் ஒன்றில் நான் அதற்குள் போகத்தான் வேண்டும். ஆனால் நான் ஒரு கோழையைப் போல் அலறிக்கொண்டும் கதறிக்கொண்டும் போக விரும்பவில்லை. அங்கே நான், அவருடைய நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையின் படியே நான் அவரை அறிந்தவண்ணமாய், பிரவேசிக்க விரும்பு கிறேன். ஒருநாளில் அவர் அழைக்கும் பொழுது, நான் மரித்தோரி லிருந்து எழுந்து வருவேன். உன்னதத்தில் ஆஜராகும்படி அவர் என்னை உத்தரவிட்டு அழைக்கையில், தேவ எக்காளம் அப்பொழுது தொனித்திடும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்த வர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள். நான் உயிரோடு இருப்பே னெனில், ஒரு க்ஷணத்தில் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமா வேன். அவ்விதமாய் ஆகாயத்தில் கர்த்தரை சந்திக்கும்படி மீதியா யிருக்கிறவர்களோடே ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படு வேன். தேவ எக்காளம் தெளிவாக உரத்து தொனிக்கும். அவரு டைய வருகையிலும் அதே சத்தம்தான் தொனிக்கும். அதே சத்தம்தான். 79அது விளங்காத சத்தம் அல்ல. “இங்கே ஏறிவா'' என்று யோவானை அந்த சத்தம் அழைத்தபோது, யோவானுக்கு அது விளங்காத சத்தமாக இருக்கவில்லை. அவன் மேலே ஏறிப் போனான், ஆமென். லாசரு மரித்தோரிலிருந்தபோது, கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தபோது, அவனது ஆத்துமா நான்கு நாட்கள் பயணமாக எங்கோ போயிருந்தது; அது எங்கே இருந்தது என்பது எனக்குத் தெரியாது, நம்மில் எவருக்கும் அது தெரியும். என்று நான் கருதவில்லை. அது எங்கிருந்த போதிலும், அது ஒரு துளி வித்தியாசத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை. மரித்து, சரீரத்தின் தோலெல்லாம் தோல் புழுக்களால் அரிக்கப்பட்டு, அழுகி நாறிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை, அவர் சத்தமிட்டு ஒரு அழைப்பு விடுத்தார். அந்த தெளிவான எக்காள சத்தமானது, “லாசருவே, வெளியே வா' என்று அழைத்தது. அங்கே ஒரு மனிதன், மரித்து நாறிக்கொண்டிருந்தவன், தன்னை உதறிக் கொண்டு, கல்லறையை விட்டு வெளியே நடந்து வந்தான். அந்த சத்தத்தைப் பற்றி எந்தவித நிச்சயமற்ற, தெளிவற்ற தன்மை கிடையாது, அப்படி ஏதும் உண்டா , சகோதரனே? அங்கே எந்தவித நிச்சயமற்ற விளங்காத தன்மை ஏதும் இல்லை. 80தெளிவாக தொனித்துக் கொண்டிருக்கிற சத்தமானது, 'பாவியே , மனந்திரும்பு , நான் உனக்கு நித்திய ஜீவனைத் தரு வேன்'' என்று கூறுகையில், இன்றிரவிலும் அதேவிதமாகத்தான் அது இருக்கிறது. “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்''. அது தான் ஆணையோடு அழைக்கிறதா யிருக்கிறது. அதைப்பற்றி எந்தவித விளங்காத தன்மையும் இல்லை. அது உண்மையாயிருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி யாய் இருக்கிறேன். அது உண்மையாயிருக்கிறது என்று கூறும் ஒரு சாட்சியாக, உலகெங்கிலும் பல இலட்சணக்கணக்கில் வேறு சாட்சிகளும் இருக்கின்றனர். வேதமாகிய தேவனுடைய வார்த் தைகள் வருகிறபொழுது, ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையும் ஒரு எக்காளமாயிருக்கிறது, வார்த்தையின் ஒவ்வொரு தொனிப்பும் ஒரு எக்காளமாயிருக்கிறது. அது சுவிசேஷ எக்காளமாயிருக்கிறது. அது முழங்குகையில், அது சத்தியமாயிருக்கிறது. வார்த்தையானது “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்'' என்று கூறும் பொழுது, அதைப்பற்றி விளங்காத தன்மை ஏதும் இல்லை . அவர் மாறாதவர். ஆம், ஐயா. “மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.'' அதைப்பற்றி விளங்காத தன்மை ஏதும் இல்லை . 81“என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியா மலும் இருப்பான். இதை நீ விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டார். அதைப்பற்றி விளங்காத தன்மை ஏதும் இல்லை. ''அவன் ஜீவிப்பான்.'' “என் மாம்சத்தைப்புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணு கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.'' அதைப்பற்றி எந்தவித விளங்காத தன்மையும் இல்லை. அது ஒரு நிச்சயமான விளங்கும் சத்தமாக இருக்கிறது. ஓ, நான் அதை அறிந்திருக்கிறேன். என்னுடைய எளிய ஐரிஷ் இருதயத்தில், ஒரு நாளில் இந்த எளிய பாவிக்கு, அந்த சத்தம் தொனிக்கக் கேட்டேன். அது என்னைப் போன்றவனுக்கு எப்படி கிடைக்கும்? ஆனால் நான், அது ஒரு தெளிவான விளங்கும் சத்தம் என்று விசுவாசித்து அதை ஏற்றுக்கொண்டேன். அது உண்மையாயிருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சியாயிருக்கிறேன். ஒரு நாளில் அவர் மீண்டும் அழைத்திடுவார். நாம் உலகை விட்டுப் போய்விடுவோம். அந்த எக்காள தொனியைப் பற்றி எந்தவித விளங்காத் தன்மையும் கிடையாது. ஆம், ஐயா. எக்காலத் திலும் அது விளங்காத சத்தமாக இருக்கவில்லை. அவர் நம்மை அழைக்கையில், இன்று தெளிவான சத்தம் தொனிக்கிறார். அவர் எதைக் கூறினாலும், அது மாறாததாயிருக்கிறது. 82நாம் வசனத்திற்குத் திரும்பிப் போவோம். “.... இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட் டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்.” வெளி.4:2 “சிங்காசனம்” என்பதைக் கவனியுங்கள். அவர் சிங்காசனத் தின் மேல் உட்கார்ந்தார். அவர் இனிமேல் பூமியில் குத்துவிளக்கு களின் மத்தியில் இருக்கவில்லை. எடுத்துக் கொள்ளப்படுதல் நடந்து விட்டது. அவர் மகிமையில் இருக்கிறார். தமது சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து வாசித்து நீங்கள் கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன். 5ம் அதிகாரத்தில் பார்க்கையில், அது இரக்கத்தின் சிங்காசனம் அல்ல என்பதைக் காண்கிறோம். அது இனிமேல் கிருபாசனம் அல்ல. அதுதானே நியாயாசனம் ஆக இருக்கிறது. ஏனெனில் அக்கினியும், மின்னல் களும், இடிமுழக்கங்களும் அதிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இனிமேல் அங்கே இரக்கம் இல்லை (அது முடிந்துவிட்டது. சபைக் காலமானது முடிவடைந்துவிட்டது). ''அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியாயிருக்கிறவன் இன்னும் நீதி செய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்த மாகட்டும்.'' இனிமேல் அது கிருபாசனம் அல்ல. 83இன்றிரவில் இரத்தமானது அந்த சிங்காசனத்தின் மேல் இருக்கிறது. அதுதானே இரக்கத்தைத் தேடுகிற ஒவ்வொரு பாவிக்கும் கிருபாசனமாக இருக்கிறது. ஆனால் அந்த நாளில் அது கிருபாசனமாக இருக்கமாட்டாது. அது நியாயாசனமாக இருந்து, அதின் மேல் சினம் கொண்ட தேவன் அமர்ந்திருக்கிறதாக இருக் கிறது. அங்கே... “நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?”. அவர் தமது மகிமையின் மேகங்களோடு வரும் பொழுது, மலைகள் கூட ஒளிந்து கொள்ள முயலும். அப்படியிருக்க நாம் அப்பொழுது எங்கே நிலைநிற்க முடியும்? மெய்யாம் ஜீவ நதி, பாவம் போக்கும் நதி, வேறே நதியை அறியேன், இயேசுவின் இரத்தந்தானே. 84ஓ, என்னே ஒரு பாடம் இது! விளங்காத சத்தம் அல்ல! அவரது சிங்காசனம் அவர்.... ''சிங்காசனத்தின் மேல்.... வீற்றிருந்தார்.'' (அவர் இனிமேல் இங்கே இல்லை.) அது இன்னொரு காரியம்; மகா உபத்திரவ காலத்திற்கு முன்பாக சபையானது மேலே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்பதற்கான நிரூபணமாக அது இருக்கிறது. பார்த்தீர்களா? ஏன்? அவர் மகிமையில் இங்கே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார், சபையானது பூமியை விட்டுப் போய்விட்டது. பிறகு, அவர் உபத் திரவ காலத்தில் வருகிறார். நான் எப்பொழுதும் அவ்வாறு தான் கூறி வந்திருக்கிறேன். நோவாவின் நாட்களில், ஒரு துளிமழை கூட பெய்யும் முன்னர், நோவா பேழைக்குள் போய்விட்டான். சோதோமில் அக்கினி விழுவதற்கு முன்னர், லோத்து சோதோமைவிட்டு வெளி யேறி விட்டான். அணு குண்டு விழுவதற்கு முன்னர் சபையானது மகிமைக்குள் பிரவேசித்துவிடும். அதுசரிதான். அணுகுண்டு விழுவதற்கு முன்னர் அவ்வாறு நடக்கும். 85“முதலில் விழுந்ததைக் குறித்து என்ன?' என்று கேட்கலாம். அது அஞ்ஞானிகள் மேல்தான் விழுந்தது, கிறிஸ்தவர்கள் மேல் அல்ல . இப்பொழுது கவனியுங்கள். ஓ! அவர் தம்முடைய கிரியை பூமியில் முடித்தார், அவர் தம்முடைய சபையை பூமியை விட்டு எடுத்துவிட்டு, இப்பொழுது அவர் நியாயத்தீர்ப்பை அனுப்பு கிறார். உலகம் அவரைப் புறக்கணித்தது. அவர் தம்முடைய நியாயத்தீர்ப்பை அனுப்பினார். அவரும் அவருடைய சபையும் மகிமைக்குள் போய்விட்டனர். பத்மு தீவில் இருந்த யோவான், சபைக்கு வெளிப்படுத் தலைக் கொண்டு வந்தவனாவான்; அவன் இங்கே ஏறிவா'' என்று அழைப்பட்டு, மகிமைக்குள் எடுத்துக் கொள்ளப்பட்ட சபைக்கு முன்னடையாளமானவனாக இருக்கிறான். ''அவன் சபைக்கு எடுத்துக்காட்டாக இருந்தான்'' என்றா கூறினர்கள்?'' இவ்வார்த்தையைக் கேட்கிற ஒவ்வொருவருக்கும்; யோவான் அவருக்காக பிரதிநிதியாக நின்றான். ஆமென். யோவான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு பிரதிநிதியாக இருந் தான். வார்த்தைக்கு சாட்சியாக இருந்தான், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு ஒரு சாட்சியாக அவன் இருந்தான். கிறிஸ்து வோடு தனிப்பட்ட முறையில் ஐக்கியம் கொண்டு இருந்தான். அவன் சபை முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினான். கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டு, அவரை அதே அடிப்படையில் ஏற்றுக் கொள்கிற ஒவ்வொரு மனிதனோ, பெண்ணோ , வாலி பனோ, வாலிபப் பெண்ணோ , யாராயிருந்தாலும் சரி, ஒருநாளில் அவர்களை அவர் கூவி அழைப்பார். “இங்கே ஏறிவா'' என்று. அவர்கள் உபத்திரவக் காலத்திற்கு முன்பாக எடுத்துக் கொள்ளப் படுவார்கள். உபத்திரவ காலமானது இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நியாயத்தீர்ப்பு அமையவிருக்கிற வேளையாக இது இருக் கிறது. சபைக் காலத்திற்கு பிறகு என்ன சம்பவிக்கப் போகிறது என்பது யோவானுக்கு காண்பிக்கப்பட்டது. பாருங்கள்? எனவே அது... 863-ஆம் வசனத்தில் மீண்டும் கவனியுங்கள், அல்லது 2ம் வசனம், “பரலோகத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அதின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்.'' பூமியில் இருந்த அதே ஆவியானவர்தான், பூமியை விட்டு கடந்து சென்று, மகிமைக்குள் சென்று, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இன்றிரவில் கிருபாசனத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மோடு இருக்கிற அதே இயேசு தான் இந்த ஆவியானவர் ஆவார். ''வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும், பதும ராகத் துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வான வில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.“ வெளி. 4:3 87நான் முடிக்கப்போகிறேன், ஏனெனில், பிரசங்கிப்பதற்காக ஏனைய சகோதரர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை காலையில் நான் இதைத் தொடர்ந்து பிரசங்கிப்பேன்.''... அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றியது ... “ஓ, என்னே ! பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அக்கினியின் ஜூவாலையினால் இதயங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் மக்கள் எவ்விடத்திலும் உள்ளனர் (அதை நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா?) அது சுத்திகரித்து, பரிசுத்தமாக்கியது ஓ, அது என் இருதயத்திள் எரிந்துகொண்டிருக்கிறது. அவர் நாமத்திற்கே மகிமை நானும் அவர்களில் ஒருவன் என்பதால் சந்தோஷமே. 88மனுஷகுமாரன் வருகையை காண்பான் என்று யோவா னுக்கு தேவன் வாக்களித்தபடியே, கர்த்தராகிய இயேசுவால் அழைக்கப்பட்டு, மேலே வரும்படி கூப்பிடப்பட்டான். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் தன் முன்பாக நின்று இருக்க, இயேசுவானவர் அவர்களிடம், “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரனுடைய வருகையைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை” என்று கூறினார். “இங்கே நிற்கிற யாவரும்' என்று இயேசு கூறாமல், ”சிலர்'' என்று மட்டுமே கூறினார். அதற்கு சில நாளைக்குப் பிறகு, அவர்கள் போய், உயிர்த்தெழுதலின் முறையும், கர்த்தருடைய வருகையும் தங்கள் முன்பாக ஒத்திகை போல் நடத்திக் காட்டப்பட்டதை கண்டார்கள். மோசே, மரித்து உயிர்த்தெழும் பரிசுத்தவான்களுக்கு அடை யாளமாகவும், எலியாவோ, மறுரூபப்படுத்தப்படும் மக்களுக்கு அடையாளமாகவும் இருக்கிறான். மோசே தான் முந்தினவன், எலியா இரண்டாமவன். கடைசி நாளுக்குரிய தூதனாயிருக்கும்படி எலியா வைக்கப்பட்டிருந்தான். அவனோடும், அவனுடைய குழுவினரோடும் சாகாமல் எடுத்துக் கொள்ளப்படுதல் வரும். மோசே உயிர்த்தெழுதலை பெறும் கூட்டத்தையும், எலியா மறு ரூபப்படுத்தப்படும் குழுவினரையும் கொண்டு வருகிறார்கள். அவர்கள் இருவருமே இங்கே, இரு கூட்டத்திற்குமாக நின்று கொண்டிருக்கிறார்கள். 89சிறிது நேரம் கழித்து, அவர்கள் அக்காட்சியை கவனித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், பேதுரு கூறினான், “நாம் மூன்று கூடாரங்களை போடுவோம். சிலர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழாகவும், சிலர் எலியாவின் கீழாக வும், சிலர் இந்த வழியாகவும் செல்வோம்'' என்று கூறினான். அவர்கள் இன்னமும் இவ்வாறு பேசிக் கெண்டிருக்கையில், ஒரு சத்தமானது பேசி, கூறியது, “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்கு செவி கொடுங்கள்'' என்று. அவர்கள் பார்த்த பொழுது, அவர்கள் இயேசுவை மாத்திரம் கண்டார்கள். அங்கே இருந்த மற்றவைகளெல்லாம் அந்த ஒருவருக்குள் மறைந்து விட்டது. ஓ, அவரே ஒளியும், சத்தியமும், வழியும், வாசலும், வானவில்லுமாயிருக்கிறார். 90ஓ, கர்த்தருக்கு சித்தமானால் நாளைக்கு நமக்கு மகத்தான பாடம் ஒன்று இருக்கிறது. நாளைக்கு நாம் “நியாயத்தீர்ப்பை ” எடுத்துக் கொள்வோம். பதுமராகம் என்றால் என்ன என்பதையும், அதன் பங்கு என்ன என்பதையும் பார்ப்போம். வச்சிரக்கல் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்ப்போம். மற்றும் வெவ்வேறு கற்க ளையும் குறித்துப் பார்ப்போம். அவைகளை எசேக்கியேல் மற்றும் ஆதியாமத்திலும், வெளிப்படுத்தின விசேஷம் பிறகு வேதாகமத் தின் மத்திய பகுதிக்கு வந்து, அவைகள் யாவையும் ஒன்றாக இணைத்து, இந்த வெவ்வேறு கற்கள் நிறங்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். அதனிடமாக நாம் திரும்பி வந்து பார்த்து அவை சரியாக இருக்கிறதா என்று பார்த்திடுவோம். அதே நிறம்தானா , மற்றும் உள்ளவைகள் சரியாக அவ்வாறு அங்கும் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்போம். அதே தேவன்தான், அதே பரிசுத்த ஆவியானவர்தான், வேதம் முழுவதிலும் அதே அடையாளங்களையும், அதே அற்புதங்களையும், தான் வாக்குரைத்தபடி காண்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை காணலாம். 91பேதுரு , யாக்கோபு, யோவான் மற்றும் அங்கே நின்று கொண்டிருந்த அவருடைய ஏனைய சீஷர்கள் அனைவரிடமும், அவர் கூறினார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தமது இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்ப தில்லை '' என்று . “இவனை நீர் என்ன செய்யப்போகிறீர்? இவன் காரியம் என்ன?'' என்று பேதுரு யோவானைக் குறித்துக் கேட்டான். ”இவனுக்கு என்ன சம்பவிக்கப் போகிறது?'' என்று கேட்டான். ''நான் வருவதைக் காண இவன் இருந்தால் உனக்கென்ன?'' என்று அவர் கேட்டார். அவன் அதைக் காணுவதற்காக அது வரை யிலும்; உயிர்வாழ அனுமதித்தார். ஏனைய சீஷர்கள் யாவரும் மரித்துவிட்ட பிறகு, யோவான் அதன் பிறகும் உயிர்வாழ்ந்து, கர்த்தருடைய வருகையானது வல்லமையோடு வருவதையும், தன் காலத்திலிருந்து நியாயத் தீர்ப்பானது முடிவு பெறும் வரையிலும், அதன் பிறகு, ஆயிரம் வருட அரசாட்சி துவங்குவதையும் கூட காண்பதற்காக வாழ்ந்திருந்தான். யோவான் அவைகள் ஒவ் வொன்றைம் கண்டான்; ஆயிரம் ஆண்டு அரசாட்சி முடிவு பெறு வதையும், அதன் பிறகு இராஜ்யத்தின் காலம் துவங்குவதையும் கூட கண்டான். ஆகவே, அவர் தம்முடைய வார்த்ைைய காத்துக் கொள்கிறார் அல்லவா? 92நாம் 2ம் வசனத்தைக் குறித்துக் கொள்வோம். கர்த்தருக்கு சித்தமானால் காலையில் 3ம் வசனத்தில் ஆரம்பிப்போம். நாம் தலைகளை வணங்குவோம். என் சகோதரனே, என் சகோதரியே, உங்களில் எத்தனை பேர்கள், ஒருநாளில் வரும்படி அவரால் அழைக்கப்படப் போகி றீர்கள் என்பதைக் குறித்து அறிந்தவர்களாய் இருக்கிறீர்கள்? அதற்கு நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? இல்லையா? நீங்கள் ஆயத்தமாய் இருந்தாலும் இல்லாமற் போனாலும் தேவனைச் சந்திக்கும்படி வருவதற்காக அழைக்கப்படுவீர்கள். அந்த எக்காள மானது தொனிக்கப்போகிறது; அவ்வாறு அது தொனிக்கையில், அது உங்களுடைய ஆக்கினைக்காகத்தான் தொனிக்கப் போகிறது; அங்கே மீண்டும் ஜீவிக்கமாட்டீர்கள்; பிசாசின் பாதாளக் குழிகளில் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக வாதிக்கப்படுவீர்கள்; அல்லது உன்னதத்தில் மகிமையான பரிசுத்தவான்களை சந்திப்பதற்காக அழைக்கப்படுவீர்கள். 93தேவன், பேதுரு யாக்கோபு யோவான் ஆகியோருக்கு கொடுத்த வாக்கைக் காத்துக் கொண்டது எவ்வளவு நிச்சயமோ, வெளிப்படுத்தலை தந்த பிரியமுள்ள யோவானுக்கு அளித்த வாக்கை அவர்காத்துக் கொண்டது எத்தனை நிச்சயமோ, சபைக்கால நெடுகிலும் அவர் தன்னுடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொண்டது எத்தனை நிச்சயமோ, அதே அளவு நிச்சயமாக, அவர் இந்தக்கடைசி நாட்களுக்கான வாக்கையும் காத்துக் கொள்வார்; அவர் இந்தக் கடைசி நாட்களில், பின்மாரியை அனுப்புவேன் என்றும், பூமியில் அவர் இருக்கையில் அவரில் இருந்த அதே ஆவியை கொண்டு வருவதாகவும், சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும் என்பதாகவும், இந்தக் கடைசி நாட்களில் இந்த “திறந்த வாசலின்' காலத்தில், அவர் தன் நாளில் செய்திட்ட அதே வல்லமை, அதே அடையாளங்கள் மற்றும் அவர் செய்த யாவையும் மீண்டும் காண்பித்து செய்திடுவதாக வாக்குரைத்திருக் கிறார். அதை நிச்சயமாக செய்திடுவார். இங்கே அது இருக்கிறது! நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவரை இப்பொழுதே நம்மிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். அவர் உங்களுக்குப் பிரசங் கித்துக் கொண்டும் போதித்துக் கொண்டும், எது சரியானது எது தவறானது என்றும் நீங்கள் கண்டு கொள்ளச் செய்ய முயன்று கொண்டும் இருக்கிறார். அது பரிசுத்த ஆவியானவர்தாமே. அவரே மானிட உதடுகள் மூலம் பேசிக் கொண்டும், மனித இனத்தின் நடுவில் கிரியை செய்து கொண்டும், இரக்கத்தையும் கிருபை யையும் காண்பிக்க முயன்று கொண்டும் இருக்கிறார். இன்னமும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆக இருக்கிற நீங்கள், இப்புத்தாண்டு தின இரவில் தேவனுக்கு நேராக உங்கள் கரங்களை உயர்த்தி, “தேவனே, வெளிப்படுத்தின விசேஷம் கொண்டு வந்த யோவான் மேல் இருந்த வல்லமையை நான் பெற்றுக் கொள்ளட்டும். அதினால், நான் யோவானைப்போல், மேலே வரும்படி அழைக்கப்படுகையில், உமக்கு முன்பாக சமாதானத்துடன் வந்து நிற்க எனக்கு முடியுமே'' என்று கூறுங்கள். உங்கள் கரத்தை உயர்த்திடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபை முழுவதிலும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ”நான் எனக்கு விடுக்கப்படும் அழைப்புக்காக பதில் உரைக்க ஆயத்தமாக இருக்கட்டும்“ 94எங்கள் பரம பிதாவே, இப்போதிலிருந்து இன்னும் இரண்டு மணி நேரம் தான் உள்ளது. அதன் பிறகு, புத்தாண்டு வேளையானது வந்துவிடும், அப்போது ஒரு புத்தாண்டு பிறந்துவிடும். இந்த ஆண்டில் நாங்கள் என்ன செய்தோமோ அவைகளை நாங்கள் செய்து விட்டோம். நான் செய்த அநேக காரியங்களைப் பற்றி நானே வெட்கமடைகிறேன். கர்த்தாவே, நான் அவைகளைப் பற்றி மனந் திரும்புகிறேன். நான் செய்திட்ட அநேக காரியங்கள் உண்டு. அவைகளில் அநேகத்தை என் சகோதரர்கள் புரிந்து கொள்ளவில்லை. நான் ஏன் அவைகளைச் செய்தேன் என்பதை வெளியிலே உள்ள எனது சகோதரர்கள் அநேகர் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், பிதாவே, அவ்வாறு செய்ய நான் நடத்தப்பட்டதால், அவ்வாறு செய்தேன். அந்த வழி நடத்தல் நிமித்தமாக நான் வெட்கமடையாதிருக்கச் செய்தருளுவீராக என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால் என்னை தொடர்ந்து வழி நடத்தும், கர்த்தாவே . நான் கிரியை செய்ய வழி நடத்தப்பட்டது போலவே தொடர்ந்து செய்ய என்னை வழி நடத்தியருளும். தேவனே, எனக்கு உதவி செய்தருளும், ஏனெ னில், நான் உம்முடைய சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டு மென உத்தமமாக தேடுகிறேன். அப்பொழுது உலகத்தின் மக் களுக்கு ஜீவ அப்பத்தை நான் கொண்டு வருவதற்கு இயலுமே. அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சபையை விட்டு நீங்கிய போது நீர் எனக்கு காண்பித்தவிதமாக, நான் அப்பத்தாலான அந்த பெரிய அப்பமலையைக் கண்டேன். வெண்வஸ்திரம்தரித்த பரிசுத்த வான்கள் பூமி முழுவதிலுமிருந்து வந்து, இந்த ஜீவ அப்பம் புசிப்பதைக் கண்டேன். ஓ தேவனே, ஜீவ அப்பத்தைக் கொண்டு மக்களை போஷிப்பதிலிருந்து நான் தவறிட வேண்டாம். 95இப்பொழுது தங்கள் கரங்களை உயர்த்திட்ட பசியுள்ள ஆத்துமாக்களை ஆசீர்வதியும். அவர்கள் இன்னும் கூடுதலான ஜீவனுக்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வரையும், பரிசுத்த அவியால் நீர் நிரப்பிட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே . தேவனே, அதை அளித்தருளும். அவர்களுக்கு ஆசீர்வாதங்களை அளித்தருளும். எங்குமுள்ள எங்கள் சகோதரர்களுக்கு ஒரு உதவி செய்தருளும். இங்கு வருவதற்காக புறப்பட்டுக் கொண்டிருக்கிற எங்களுடைய ஊழியக்கார சகோதரர்களை ஆசீர்வதியும், மற்றவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் அந்த சத்தத்தை கவனமாகவும், பயபக்தியோடும் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் எங்களுக்கு ஜீவ அப்பத்தை தரவேண்டு மென்று ஜெபிக்கிறோம், பிதாவே. அதை அளித்தருளும். எங்களை ஆசீர்வதித்தருளும். புதிய நம்பிக்கைகளோடும், புதிய சிந்தைகளை கொண்டு வருவதோடும், புதிய வெளிப்படுத்து தல்களோடும், புதிய வல்லமையோடும் மற்றும் எல்லாவற் றோடும் இப்புத்தாண்டு உதயமாகட்டும். உம்முடைய ஆசீர்வாதங் கள், வாக்குத்தத்தங்கள் ஆகியவற்றை அது எங்களுக்கு மீண்டும் புதுப்பித்துத் தரட்டும். கர்த்தாவே. உம்முடைய கரங்களுக்குள் ளாக, எங்களுடைய ஜெபத்தோடு எங்களையே நாங்கள் ஒப்புக் கொடுக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென். என்னுடைய சகோதர, சகோதரிகளே, உங்களுக்கு நன்றி.